தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சுஷ்மிதா பட் ஃபிட்னெஸ்!

நன்றி குங்குமம் டாக்டர்

கன்னட தொலைக்காட்சியில் கவ்யாஞ்ஜலி என்ற தொடர் மூலம் தனது திரைப் பயணத்தை தொடங்கியவர் சுஷ்மிதா பட். அதன் பிறகு பல விளம்பரங்கள், பிரின்ட் மாடலிங் மேகசின் ஆகியவற்றில் இடம்பிடித்தார். அதே நேரத்தில் தனது நடனப் பயிற்சியையும் தொடர்ந்தார். மேடைகளில் பரதநாட்டியம் ஆடிய அனுபவம், அவரது முகபாவங்களையும், உடல் இயக்கங்களையும் மேம்படுத்தியது.

அதைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு கன்னடத் திரையில் சவ் சவ் பாத் என்ற திரைப்படத்தில் சந்தியா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானார். அதன்பிறகு கெளதம் வாசுதேவ்மேனன் இயக்கத்தில் மம்முட்டி நடித்த டோமனிக் அண்ட் தி லேடிஸ் பர்ஷ் என்ற மலையாள படத்தில் சுஷ்மிதா பரதநாட்டியக் கலைஞராக நடித்தார். தற்போது தமிழ் திரையுலகில் இவர் அடியெடுத்து வைத்துள்ளார். சமீபத்தில் விக்ரம் பிரபு நடித்த லவ் மேரேஜ் எனும் படத்தில் நடித்திருக்கிறார். இவர், தமிழை நன்கு பேசக்கூடியவர் என்பதால் தமிழ் திரையுலகில் நீடித்துப் பயணிக்க வாய்ப்பு உள்ளதாக தமிழ் திரையுலகம் கிசுகிசுக்கிறது. பரதநாட்டியத்தில் தொடங்கி உடற்பயிற்சியிலும் அசத்தி வரும் சுஷ்மிதாவின் ஃபிட்னெஸ் ரகசியத்தை தெரிந்துகொள்வோம்.

சுஷ்மிதாவின் தினசரி வாழ்க்கை முறையே மிகவும் ஒழுங்கானது. அதிகாலை எழுந்தவுடன் சிறிது நேர யோகா, சூரிய நமஸ்காரம், பிராணாயாமம் ஆகியவற்றுடன் நாளை தொடங்குகிறார். பிறகு சிறிது நேரம் தியானம் செய்யும் பழக்கம் அவருக்கு உள்ளது. இது உடம்புக்கும் மனதுக்கும் சமநிலை கொடுக்கிறது என்று கூறுகிறார். உடற்பயிற்சியில் அவர் உடல் எடையைத் தாங்கும் வகையில் செய்யும் பயிற்சிகளை (bodyweight workouts) முக்கியமாக பயின்றுவருகிறார். அதாவது ப்ளான்கஸ், ஸ்குவாட்ஸ், புஷ் அப்ஸ், லங்க்ஸ் (Planks, Squats, Push-ups, Lunges) போன்ற அடிப்படை பயிற்சிகளை சரியான முறையில் செய்து தன்னுடைய உடலை நல்ல முறையில் பராமரித்து வருகிறார். அவரின் நடனம் குறிப்பாக பரதநாட்டியம் ஒரு கலையாக மட்டுமல்ல ஒரு உடற்பயிற்சியாகவும் செயலில் உள்ளது.

அரை மண்டி, மூச்சுக்கட்டுப்பாடு, முகபாவனைகள், கைநடைகள் இவை அனைத்தும் ஒரே சமயத்தில் உடலை சீராக இயக்கும் வகையில் பயிற்சி தருகின்றன. இதனால்தான் அவர் தனக்கே உரிய உற்சாகத்தையும் இளமையையும் இன்று வரை தக்க வைத்திருக்கிறார். இவை தவிர, ரெசிடென்ஷ் ஃபெண்ட் பயிற்சிகள், யோகா பால் பயிற்சிகள், ஸ்டெரச்சிங் பயிற்சிகள் இவையும் வாரத்தில் சில நாட்கள் மேற்கொள்கிறார். அவ்வப்போது ஹிட் (HIIT - High-Intensity Interval Training) பயிற்சிகளைச் செய்கிறார்.

இது குறைந்த நேரத்தில் அதிக சக்தியைச் செலவழிக்கவைக்கும் பயிற்சி முறை. ஆனால் இவற்றை அவர் கணக்காகத்தான் செய்கிறார். உடலை சோர்வடையவைக்கும் அளவுக்கு அல்ல, வலிமை தரும் அளவுக்கே இருக்க வேண்டும் என்பதே அவரது நோக்கம். எனவே, உடற்பயிற்சியை ஒரு வேலையாக கருதி செய்யாமல் தனது வாழ்க்கை முறையில் ஒன்றாக மாற்றி இருக்கிறார்.

உணவுமுறையிலும் அவருக்கு கட்டுப்பாடு அதிகம். காலை நேரத்தில் எழுந்தவுடன் சிறிது தண்ணீர் அருந்திவிட்டுதான் எந்த உணவையும் எடுத்து கொள்வாராம். அந்தவகையில், பழச்சாறு, பழங்கள், பாசிப்பருப்பு, உளுந்து அடைத்த இடியாப்பம் போன்ற இயற்கை உணவுகளை மட்டுமே எடுத்துக்கொள்கிறார். இந்த உணவுகளில் நீர்ச்சத்து அதிகம் இருக்கும் அளவிற்கு அவர் எடுத்துக் கொள்கிறார். இதனால் உடலுக்குத் தேவையான அனைத்து சக்திகளும் அவருக்கு போதுமான அளவு கிடைக்கிறது.

மதிய உணவிலும் சாமை, தினை, கீரை வகைகள், தயிர், பருப்பு, வெந்தயக் கீரை போன்ற இயற்கை உணவுகள்தான். அதிகம் சிறுதானியங்கள் எடுத்துக் கொள்வது அதில் இருக்கும் நார்ச்சத்து மற்றும் மாவு சத்துகள் அவரது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தருவதோடு, உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேராமல் இருக்கவும் செய்கிறது.

இரவு மிக எளிமையாக சாதம் கலக்காத கஞ்சி, பழம், வெறும் தயிர் போன்றவற்றிலேயே முடிக்கிறார். இவர் தொடர்ந்து கடைப்பிடித்து வரும் முக்கிய பழக்கங்களில் ஒன்று சாப்பிடும் போது தொலைக்காட்சி, கைபேசி போன்றவற்றைத் தவிர்ப்பதுதான். காரணம், நமக்கு பிடித்த உணவை ருசிக்கமுடியவில்லை என்றால், உணவோடு உறவாட முடியாது என்பதே அவர் நம்பிக்கை.

தூக்கம் என்பது உடலை மறுபடியும் பழுது பார்க்கும் நேரம் என்பதால், தூக்க நேரமும் தவறாது. இரவு 10 மணிக்குள் படுக்கிறார். அந்த நேரத்தில் மனதையும் உடலையும் அமைதியாக்கும் சூழல் அவசியம். அதற்கு குறைவான வெளிச்சம், நல்ல காற்றோட்டம் நிறைந்த சூழ்நிலையில் தூங்குவதை பின்பற்றுகிறார் சுஷ்மிதா பட்.

தொகுப்பு: மோகனப்பிரியா

Related News