தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டீடாக்ஸ் டயட்!

நன்றி குங்குமம் டாக்டர்

Advertisement

நாம் தினசரி எடுத்துக்கொள்ளும் உணவுகளுடன் சேர்த்து டீ, காபி, பானங்கள், நொறுக்குத் தீனிகள் போன்றவற்றையும் சாப்பிடுகிறோம். இவ்வாறு நாம் எடுத்துக் கொள்ளும் பக்க உணவுகளில் உடலுக்கு தீங்கு செய்யும் நச்சுகளும் கலந்திருக்கிறது. எனவே, சரியான நேரத்துக்கு உணவு உட்கொள்வது எவ்வளவு அவசியமோ அதே அளவு உடலில் சேரும் நச்சுகளையும் கழிவுகளையும் அகற்றுவதும் முக்கியம்.

இந்த குடல் கழிவுகளை வெளியேற்ற நாம் இயற்கையான உணவுகளையே மருந்தாகப் பயன்படுத்தலாம். அவைதான் டீடாக்ஸ் உணவுகள் என்று கூறப்படுகிறது. இந்த டீடாக்ஸ் உணவுகள், கொழுப்புச்சத்து, மாவுச்சத்து நிறைந்த உணவுகளால் வயிற்றுக்கு உண்டாகும் பாதிப்பை தடுக்கிறது. மேலும், உணவு குடலில் உள்ள அசுத்தங்களை நீக்கி, செரிமானத்தையும் எளிதாக்க உதவுகிறது. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்:

வைட்டமின் சி சத்து அதிகமுள்ள எலுமிச்சை டீடாக்ஸ் உணவு வகைகளில் முக்கியமானது. எலுமிச்சைச் சாற்றை காலை எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிப்பது மிகவும் நல்லது. இதனால் இரவு சாப்பிட்ட உணவில் உள்ள கெட்ட பாக்டீரியாக்கள் அகற்றப்படும்.

இரவில் மது அருந்துவதினால், காலையில் ஏற்படும் அஜீரண கோளாறு, வயிற்றில் வாயு சேர்தல் ஆகியவற்றைத் தடுக்க இஞ்சி உதவும். இஞ்சியை தேநீரில் கலந்து குடிக்கலாம்.

ரத்தத்தில் உள்ள கெட்ட பாக்டீரியாக்கள், பூஞ்சைக் காளான்களை பூண்டு எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டது. மேலும் ரத்தத்தில் வெள்ளை அணுக்களை அதிகளவில் உற்பத்தி செய்யவும் பூண்டு உதவும்.

மெக்னீசியம், இரும்புச் சத்து, வைட்டமின் சி சத்துகள் அடங்கிய பீட்ரூட் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவும். இதன்மூலமாக ரத்த செல்களில் தரம் அதிகரிக்கும்.

பிரவுன் நிற கவுனி அரிசி வெள்ளை அரசியைக் காட்டிலும் உடலுக்கு நல்லது. இதில் உடலுக்குத் தேவையான மாங்கனீஸ், மெக்னீசியம், இரும்புசத்து உள்ளிட்ட தாதுக்கள் அடங்கியுள்ளன. ரத்தத்தில் சேர்ந்துள்ள அசுத்தங்களை சுத்தம் செய்து உடலை புத்துணச்சியுடன் வைக்க கவுனி அரிசி உதவுகிறது.

தொகுப்பு: தவநிதி

Advertisement