தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கருப்பையைக் காக்கும் கருப்பட்டி!

நன்றி குங்குமம் டாக்டர்

கருப்பட்டியில் வெறும் இனிப்பு சுவை மட்டுமில்லை. அதில் இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் ஏ, பாஸ்பரஸ், ஃபோலிக் ஆசிட் போன்ற சத்துக்கள் மிகுந்து காணப்படுகின்றன. கருப்பட்டியை சாப்பிட்டு வர, வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் சீரான நிலையில் இருக்கும். அதனால் தான் கருப்பட்டியை ஒரு துண்டு சாப்பிட்டால் கூட உடலுக்கு நல்லது என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.

பருவமடைந்த பெண்களுக்கு உளுந்துடன் சேர்த்து களியாக செய்து கொடுக்க இடுப்பு எலும்பு பலப்படும்.கருப்பை ஆரோக்யமாக இருக்கும். நார்ச்சத்து அதிகம் உள்ளது.

கருப்பட்டி ரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு சுறுசுறுப்பைத் தருகிறது.

உணவில் கருப்பட்டியை பயன்படுத்திவர, பற்களும், நரம்புகளும் உறுதியாகும். நீரிழிவு நோயாளிகள் கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டி கலந்து சாப்பிட்டு வர சர்க்கரையின் அளவு குறையும். அடிக்கடி சிறுநீர் போவது குறையும்.கருப்பட்டி பெண்களின் கருப்பைக்கு மிகவும் ஏற்றது. சுக்கு, மிளகு கலந்து கருப்பட்டியை சேர்ந்து சாப்பிட தாய்ப்பால் நன்றாக சுரக்கும். குழந்தைக்கும் நல்ல ஊட்டச்சத்து கிடைக்கும்.பாலுடன் கருப்பட்டி, பொடித்த மிளகு, மஞ்சள் தூள் ஆகியவை கலந்து குடித்தால் தொண்டைப்புண் சரியாகும். சிலருக்கு மூலநோய் அவஸ்தை இருக்கும். அவர்கள் இதனை பின்பற்றலாம். கருப்பட்டிக்கு வயிற்று புண்களை ஆற்றும் சக்தி உண்டு.

வாயு தொல்லையால் அவதிப்படுபவர்கள் ஓமத்துடன் கருப்பட்டியை சாப்பிட வேண்டும். நல்ல தீர்வு கிடைக்கும். கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்க கருப்பட்டியை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். நாம் அன்றாடம் உபயோகித்து வரும் வெள்ளை சர்க்கரை உட்கிரகிக்கப்படுவதற்காக நம் உடலில் இருக்கும் சில வைட்டமின் சத்துகளை கூட எடுத்துக் கொள்ளும். அதாவது நம்முடைய உடலில் ஏற்கெனவே இருக்கும் சத்துக்களை உறிஞ்சிவிடுகிறது. அதனால் அதனை வைட்டமின் திருடன் என்பார்கள். ஆனால் கருப்பட்டி அப்படியல்ல. உடலில் உள்ள சத்துகள் அழியாமல் பாதுகாக்கிறது. மேலும், எலும்புகளுக்கும் பலம் சேர்க்கிறது. எனவே, வெள்ளை சர்க்கரை சாப்பிடுவதை தவிர்த்து, கருப்பட்டியைச் சேர்த்துக் கொள்வது நல்ல பலன்களை தரும்.

தொகுப்பு: எஸ்.மகாலட்சுமி

Related News