தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கடுகு எண்ணெயின் நன்மைகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

தென்னிந்திய சமையலில் பெரும்பாலும் சூரியகாந்தி எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் இவற்றைதான் சமையலுக்கு பயன்படுத்தி வருகிறோம். ஆனால், வட இந்தியர்களின் சமையலில் பெரும்பாலும் கடுகு எண்ணெயைதான் பயன்படுத்துகிறார்கள். கடுகு எண்ணெயில் அப்படியென்ன ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறது என்று தெரிந்து கொள்வோம்.

இதய நோய் வராமல் தடுத்தல் கடுகு எண்ணெயில் நல்ல கொலஸ்ட்ரால்கள் அதிகமாக உள்ளது. மோனோசேச்சுரேட் மற்றும் பாலிசேச்சுரேட் கொழுப்புகள் இதில் காணப்படுகின்றன. எனவே இவை உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைத்து நம் உடலில் நல்ல கொழுப்புகளை கூட்டுகிறது. மேலும் இதில் உள்ள ஒமேகா

3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. எனவே, அவ்வப்போது கடுகு எண்ணெயை சமையலில் சேர்த்துக் கொண்டால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும் என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றது.

புற்றுநோய் வராமல் தடுக்கிறது

கடுகு எண்ணெயில் புற்றுநோயைத் தடுக்கும் பொருட்கள் அடங்கியுள்ளன. அதிலும் குறிப்பாக வயிறு மற்றும் குடல் புற்றுநோயிலிருந்து நம்மை காக்கிறது. இதற்கு முக்கிய காரணம் இந்த எண்ணெயில் உள்ள குளுக்கோஷினோலேட் தான்.

வலியை குறைக்கிறது

கடுகு எண்ணெய் ஒரு சிறந்த வலி நிவாரணியாக செயல்படுகிறது. மூட்டு வலி மற்றும் மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கிறது. இதிலுள்ள அழற்சி எதிர்ப்பு பொருள் வாதநோய் மற்றும் ஆர்த்ரைடிஸ் பிரச்னைகளை தடுக்கிறது.

வாய் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது

பல் சொத்தை மற்றும் பற்களின் வலிமைக்கு இந்த எண்ணெய் பெரிதும் உதவுகிறது. வாயில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கிறது. மேலும் பல் இடுக்குகளில் படிந்திருக்கும் கசடுகளை நீக்குகிறது. இது பற்களை வெண்மையாக்குவதோடு, பல்வலி மற்றும் வாய் துர்நாற்றம் போன்றவற்றிலிருந்து காக்கிறது.

சளி மற்றும் இருமல் நீங்ககடுகு எண்ணெயை சமையலில் பயன்படுத்துவது மூலம் சளி மற்றும் இருமல் தொல்லையிலிருந்து விடுவிக்கிறது. இதற்கு முக்கிய காரணம் இது உடல் சூட்டை ஏற்றி சளியை இளகச் செய்து சுவாசப் பாதை வழியாக எளிதாக வெளியேற்றிவிடுகிறது. இதிலுள்ள பொருட்கள் சளி, இருமல் மற்றும் நோய்த்தொற்று போன்றவற்றை குணப்படுத்துகிறது. சைனஸ், ஆஸ்துமா போன்றவற்றிற்கும் மருந்தாக செயல்படுகிறது. மேலும் இந்த எண்ணெய் நமது உடலில் உள்ள வியர்வை சுரப்பியை அதிகரித்து காய்ச்சலால் ஏற்படும் அதிகப்படியான வெப்பநிலையை குறைத்து காய்ச்சலிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.

தொகுப்பு: கவிதா பாலாஜி

Related News