ஆன்டி ஆக்சிடென்ட் நிறைந்த வால் மிளகு
நன்றி குங்குமம் தோழி
மிளகு, வால் மிளகு இரண்டும் ஒரே வகையை சேர்ந்தவை. மிளகைப் போன்றே இருக்கும். ஆனால் இதில் காம்புடன் இணைந்து, பார்ப்பதற்கு வால் போன்று இருப்பதால் இதனை ‘வால் மிளகு’
என்பார்கள்.
*சிறிதளவு வால் மிளகுத்தூள் எடுத்து சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டால் நீரிழிவு நோய் குறையும்.
*வால் மிளகுத்தூள், லவங்கப்பட்டை தூள் சேர்த்து நெய்யில் கலந்து சாப்பிட இருமல் குறையும்.
*வால் மிளகு, சந்தனப்பொடி, அதிமதுரம் சிறிது எடுத்து மூன்றையும் நீரில் இட்டு காய்ச்சி மூன்று வேளையும் குடித்து வந்தால் வயிற்றில் கல் அடைப்பு மற்றும் சிறுநீர் பிரச்னை குணமாகும்.
*வால் மிளகை 2 வெற்றிலையில் வைத்து சாப்பிட வாய் துர்நாற்றம், தொண்டைப்புண் ஆகியவை குணமாகும்.
*சளித் தொல்லை உள்ளவர்கள், தொண்டை சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு மோரில் சீரகம், வால் மிளகுப் பொடி செய்து கலந்து குடிக்கலாம். இரவில் வெதுவெதுப்பான பாலில் வால் மிளகுத்தூள், அதிமதுர தூள் கலந்து குடிக்க பிரச்னை குறையும்.
*உடல் சூடு உள்ளவர்களும், சிறுநீர் எரிச்சல் இருந்தாலும் பசும்பாலில் வால் மிளகை ஊறவைத்து அதில் பீர்க்கங்காய் அல்லது நீர்க்காய்களை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறையும். வாதம், பித்தம், வயிற்றுவலி போன்ற பிரச்னைகளும் குணமாகும்.
*கீரைகள் சமைக்கும் போது அதில் வால் மிளகுப் பொடி சிறிது சேர்த்து செய்தால் உடலுக்கு சத்துக்களை அதிகரிக்க செய்யும். வால் மிளகில் அதிக வேதிப் பொருட்கள் இருப்பதால் அதிக மருத்துவ குணங்களை கொண்டது.
வால் மிளகில் வேதிப் பொருட்கள் இருப்பதால் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. கல்லீரலில் ஏற்படும் வைரஸை வராமல் தடுக்கும். இதில் உள்ள கேரீன், கேர்யோ பில்லைன், சிரியோல் க்யு பபீன் இருப்பதாலும், ஆன்டி ஆக்சிடென்ட் தன்மை உள்ளதாலும் பல்வேறு நோய்களை தடுப்பதில் ‘வால் மிளகு’ சிறப்பாக செயல்படுகிறது.
தொகுப்பு: எஸ்.மாரிமுத்து, சென்னை.