ஒரு தெய்வம் தந்த பூவே
நன்றி குங்குமம் தோழி
குழந்தைப்பருவ மனக்கோளாறு நோய்
(Childhood Schizophrenia)
குழந்தைப்பருவ ஸ்கிசோஃப்ரினியா என்றால் என்ன?
குழந்தைப்பருவ ஸ்கிசோஃப்ரினியா என்பது 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் கடுமையான மனநலக் கோளாறு ஆகும். இது அவர்கள் யதார்த்தத்தை கையாளும் விதத்தை பாதிக்கிறது. அவர்கள் அசாதாரண எண்ணங்கள், உணர்வுகள் அல்லது நடத்தைகளைக் கொண்டிருக்கலாம். இது குழந்தைப் பருவத்தில் ஆரம்பம் அல்லது மிகவும் ஆரம்பகால ஸ்கிசோஃப்ரினியா என்றும்
அழைக்கப்படுகிறது. இவ்வகைக் கோளாறு அரிதானது. ஒரு சதவீதத்திற்கும் குறைவான குழந்தைகளுக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நோயைக் கண்டறிவது கடினமாக இருக்கிறது. எந்த சிகிச்சையும் இதற்கு கிடையாது என்றாலும், சில சிகிச்சைகள் உதவும்.
குழந்தைப்பருவ ஸ்கிசோஃப்ரினியாவின் அறிகுறிகள் (Childhood Schizophrenia Signs)
ஸ்கிசோஃப்ரினியா உள்ள சில குழந்தைகள் முதலில் ப்ரோட்ரோம் (Prodrome ) அல்லது ப்ரோட்ரோமல் கட்டம் (Prodromal phase) என்றழைக்கப்படும் கால கட்டத்தை கடந்து செல்கின்றார்கள். அவர்கள் அன்றாட வாழ்க்கையிலிருந்து விலகிவிடுவார்கள். அதிக கவலை உள்ளவர்களாகவும், பள்ளியின் மீதும், நண்பர்கள் மீதும் அதிக நாட்டம் இல்லாமல் இருப்பார்கள். இதுபோன்ற அறிகுறிகளைக் காட்டும் எல்லா குழந்தைகளையுமே மனநோய்க்கோளாறு உள்ளவர்களாகச் சொல்ல முடியாது. அதிகப்படியான சிக்கல்கள் இருந்தால் மட்டுமே மருத்துவரிடம் பேசுவது அவசியம்.
மிகச்சிறிய குழந்தைப்பருவ ஸ்கிசோஃப்ரினியாவின் அறிகுறிகள் (Early Childhood Schizophrenia Signs)தவழும் அல்லது குறுநடை போடும் ஒரு குழந்தை கூட ஸ்கிசோஃப்ரினியாவின் அறிகுறிகளைக் கொண்டிருக்கலாம். அவை வயதான குழந்தைகள், பதின் பருவத்தினர் மற்றும் பெரியவர்களிடமிருந்து வேறுபட்டவை. குழந்தையின் வளர்ச்சியை இது பாதிக்கிறது.
*நீண்ட நாட்களாக குழந்தை சுறுசுறுப்பில்லாமல் மந்தமாக இருப்பது
*கை, கால்கள் நெகிழ்வாக இருப்பது
*குழந்தை ஊர்வது, நடப்பது அல்லது பேசுவதில் தாமதம்
*அனிச்சையாக கைகளை அசைப்பது.
*தளர்வான அல்லது சரிந்த தோற்றம்
இந்த அறிகுறிகள் மனக்கோளாறு நோய் இல்லாத பிற பிரச்னைகள் உள்ள குழந்தைகளிடத்திலும் இருக்கலாம் என்பதால், உண்மையில் என்ன நடக்கிறது என்பதை மருத்துவ பரிசோதனையினால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.
பின் குழந்தைப்பருவ ஸ்கிசோஃப்ரினியா அறிகுறிகள் (Later Childhood Schizophrenia Signs)
சற்று வயதான (Older children) குழந்தைகளில், ஸ்கிசோஃப்ரினியாவின் நடத்தை மாற்றங்கள் காலப்போக்கில் அல்லது திடீரென்று எங்கும் இல்லாதது போல் நீங்கள் கவனிக்கலாம். உங்கள்
பிள்ளைகள் ஒதுங்கிப் போய் ஒட்டிக் கொள்வது, விசித்திரமான மற்றும் யோசனைகள் அல்லது அச்சங்களைப் பற்றி பேசலாம். இந்த அறிகுறிகளைக் கண்டவுடன் மருத்துவரிடம கூட்டிச் செல்லுங்கள். மனநோய் கோளாறுக்கான அறிகுறிகளைக் காண்பிப்பதற்கு முன்பு நோயறிதலைக் கண்டுபிடிதது சிகிச்சையைத் தொடங்குவது அவசியம்.
வயதான குழந்தைகளின் அறிகுறிகள்...
lயதார்த்தத்திற்கும் கனவுகளுக்கும், கதைகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு இடையே உள்ள வித்தியாசத்தை அவர்களால் சொல்ல முடியாது.
lயாரோ அல்லது ஏதாவது அவர்களை காயப்படுத்துகிறார்கள் என்ற தீவிர பயம் (மாயை Delusions )
lகாதில் ஏதாவது செய்யச் சொல்வது போன்ற கிசுகிசுப்பு குரல்கள் போன்ற உண்மையில்லாத விஷயங்களைக் கேட்பது (செவிப்புலன் மாயைகள் Auditory Hallucinations)
lஒளிரும் விளக்குகள் அல்லது இருளின் திட்டுக்கள் போன்ற உண்மை இல்லாத விஷயங்களைப் பார்ப்பது (காட்சி மாயத்தோற்றம் Visual Hallucinations)
lமனச்சோர்வு அல்லது பதட்டம்.
lஅவர்கள் பேசும்போது உணர்ச்சி வெளிப்பாடு இல்லாதது
lகிளர்ச்சி (Agitated), குழப்பமான நடத்தை, அதைத் தொடர்ந்து உட்கார்ந்து வெறித்துப் பார்த்தல்
lமிகவும் சிறிய குழந்தையைப்போல் நடிப்பதுஸ்கிசோஃப்ரினியாவின் அறிகுறிகளை நிபுணர்கள் நேர்மறை, எதிர்மறை மற்றும் அறிவாற்றல் என மூன்று வகைகளாகப்
பிரிக்கிறார்கள்.
நேர்மறையான அறிகுறிகள் (Positive Symptoms)
அசாதாரண அசைவுகள், அசாதாரண எண்ணங்கள் மற்றும் மாயத்தோற்றங்கள் போன்று யதார்த்தத்திற்கு புறம்பான நடத்தைகள் இதில் அடங்கும்
எதிர்மறையான அறிகுறிகள் (Negative Symptoms)
நடத்தைகள் மற்றும் உணர்ச்சிகளை உள்ளடக்கியது. அதாவது தனிமைப்படுத்திக் கொள்ளுதல், அதிகம் பேசாமல் இருப்பது அல்லது கொஞ்சம் கூட பேசாமல் இருப்பது உணர்ச்சிகளை குறைவாக வெளிக்காட்டுவது அல்லது உணர்ச்சிகளே இல்லாமல் இருப்பது.
புலனுணர்வு அறிகுறிகள் (Cognitive Symptoms)
ஒரு குழந்தை எப்படி நினைக்கிறது அல்லது நினைவு கொள்கிறது? ஒன்றின் மேல் கவனம் செலுத்துவதில் அல்லது ஒன்றை புரிந்து கொள்வதில் சிக்கல் போன்ற வேறுபாடுகளை காட்டலாம்.
குழந்தைப்பருவ ஸ்கிசோஃப்ரினியாவிற்கான காரணங்கள்...
ஒரு சிலருக்கு குழந்தைப் பருவத்திலும் மற்றும் சில பேருக்கு நடுவயதிலோ அல்லது முதுமையிலோ ஸ்கிசோஃப்ரினியா ஏன் வருகிறது என்பது இன்னும் சரியாக தெரியவில்லை.குழந்தையின் மரபணுக்கள் மற்றும் மூளையின் ரசாயனங்கள் போன்றவை காரணிகளாக இருக்கலாம். இந்த நோய் சில குடும்பங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்களுக்கு ஏற்படுகிறது. குடும்ப உறுப்பினர்களில் யாரேனும் ஒருவருக்கு இருந்தால் உங்கள் குழந்தைக்கும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.சில வல்லுநர்கள் ஒரு பெண்ணின் கர்ப்பகாலத்தில் நடந்த விஷயங்கள் ஒரு குழந்தைக்கு ஸ்கிசோஃப்ரினியா வருவதற்கான காரணமாக இருக்கலாம் என்று கருதுகிறார்கள்.
*போதைப்பொருள் அல்லது ஆல்கஹால் பயன்பாடு
*வைரஸ்கள், பாக்டீரியாக்கள் தொற்றுக்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ள இடங்கள் அல்லது ரசாயனங்களுடன் தொடர்பு (contact with chemicals)
*கர்ப்பிணியின் மன அழுத்தம்
*கர்ப்பிணியின் மோசமான ஊட்டச்சத்து.
மருத்துவர்களுக்கு, குழந்தைப்பருவ ஸ்கிசோஃப்ரினியாவை கண்டறிவது ஒரு சவாலான விஷயம். வெவ்வேறு மனநிலைமைகள் ஒரே மாதிரியான அறிகுறிகளைக் கொண்டிருப்பதால் சரியான நோயறிதலைப் பெறுவது கடினமான காரியமாகும். நிறைய நேரமும் முயற்சியும் தேவைப்படுகிறது. குழந்தையின் முழுமையான உடல்பரிசோதனை, ரத்தப் பரிசோதனைகள், மனநலப்பரிசோதனைகள், குழந்தையின் மூளையின் இமேஜிங் சோதனைகள் என பல சோதனைகளில் நிபுணர்களும் ஈடுபடுவார்கள். இவை அனைத்தும் சரியான நோயறிதலைக் கண்டறிவதிலும், உங்கள் குழந்தையின் நோயை நிர்வகிக்க உதவும் சிறந்த சிகிச்சைத் திட்டத்தை உருவாக்குவதிலும் இந்த கடுமையான சோதனைகள் முக்கியமானவை. அதற்கு உங்களின் ஒத்துழைப்பும், பொறுமையும் தேவை.குழந்தைப்பருவ ஸ்கிசோஃப்ரினியாவிற்கான சிகிச்சை முறைகள் பெரியவர்களுக்கான சிகிச்சைமுறைகள் சிலவும் குழந்தைகளுக்கு கொடுக்கப்படுகிறது.
மருத்துவ முறை (Medications)
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மனநோய் எதிர்ப்பு மருந்துகளை மருத்துவர் பரிந்துரைக்கலாம். பிரமைகள் (defusions) மற்றும் மாயத்தோற்றம் (Hallucinations) ஆகியவற்றை நிர்வகிக்கவும், கட்டுப்படுத்தவும் இந்த மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
உளவியல் சிகிச்சை (Psychotherapy)
குழந்தைகளுக்கான மனநல சிகிச்சையில் தேர்ந்த ஒரு மருத்துவரால் குடும்ப சிகிச்சை மற்றும் ஆதரவு குழுக்கள் மூலம் உங்கள் குழந்தைக்கும் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கும் நோயைப்பற்றியும், மன அழுத்த சூழ்நிலைகளை எவ்வாறு கையாள்வது என்பது பற்றியும் கற்பிப்பதன் மூலம் உங்கள் குழந்தைகளின் ஸ்கிசோ
ஃப்ரினியாவை நிர்வகிப்பதில் உதவி புரியும்.
வாழ்க்கைத்திறன் பயிற்சி (Life skills training)
சிலவகை சிறப்பு வகுப்புகள் உங்கள் பிள்ளையின் சமூகத்திறன்களையும், அன்றாடப் பணிகளை எப்படிச் செய்வது என்பதையும் கற்பிக்க முடியும். பள்ளியில் எதிர்கொள்ளக்கூடிய சவால்களை எப்படி சமாளிப்பது என்பது குறித்த உதவிக் குறிப்புகளையும் இந்த வாழ்க்கைத்திறன் பயிற்சிக்கான சிறப்பு வகுப்புகள் மூலம் அவர்கள் கற்றுக் கொள்ள முடியும். குழந்தைப்பருவ மன நோயில் உள்ள சிக்கல்கள் சரியான நேரத்தில் நோய்க்கண்டறிதலும், சிகிச்சை தருவதையும் தவறவிட நேரிட்டால் குழந்தையின் பிற்கால வாழ்க்கையிலும் சிக்கல்களை ஏற்படுத்தும்.
*பிற மனநல கோளாறுகள்
*சுய தீங்கு அல்லது தற்கொலை எண்ணம்
*போதைப்பொருள், ஆல்கஹால் பயன்பாடு
*குடும்பம் மற்றும் நண்பர்களுடன் மோதல், தனிமைப்படுத்திக் கொள்ளுதல்
*சட்ட மற்றும் நிதிச் சிக்கல்கள்
*தனியாக வாழ்வது, பள்ளிக்குச் செல்வதில், வேலை செய்வதில் சிக்கல்.இது போன்ற வாழ்க்கைச் சிக்கல்களை அவர்கள் சந்திக்க நேரிடலாம்.
குழந்தைப்பருவ ஸ்கிசோஃப்ரினியாவை ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டால், உங்கள் குழந்தை பெரியவராக வளரும்போது அதை நிர்வகிக்க முடியும். மருத்துவ நிபுணர்கள் அவர்களின் நிலை மற்றும் வாழ்க்கைக்கான சிகிச்சைகள் குறித்தான தகவல்களை உங்களுக்கு கற்றுத் தருவார்கள். இதற்கு சரியான சிகிச்சை
இல்லாவிட்டாலும் கூட மருத்துவர்களின் உதவியுடன் இவர்களால் பள்ளியிலும், வேலையிலும், சமூக வாழ்விலும் வெற்றி பெறமுடியும்.
தொகுப்பு: உஷா நாராயணன்