கட்டிடத்தில் பதுக்கிய கருந்திரி பறிமுதல்
Advertisement
சிவகாசி, அக்.29: சிவகாசி அருகே வி.சொக்கலிங்காபுரம் விஏஓ ராஜகுரு. இவர் சம்பவத்தன்று வழக்கம்போல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பஞ்சவடிவு என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் எவ்வித அனுமதியின்றி பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் கருந்திரிகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இது குறித்து அவர் சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரூ.500 மதிப்புள்ள கருந்திரியை பறிமுதல் செய்தனர். இது குறித்து பஞ்சவடிவு மீது வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement