ஆக. 22ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
விருதுநகர், ஆக. 14: விருதுநகர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆக. 22ம் தேதி நடைபெறும் என கலெக்டர் சுகபுத்ரா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்: விருதுநகர் மாவட்ட ஆட்சியரக மக்கள் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆக. 22ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. எனவே, விவசாயிகள் கலந்து...
அனைத்து தொழிற்சங்கத்தினர் ஒன்றிய பாஜ அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
விருதுநகர், ஆக. 14: பொதுத்துறைகளை தனியாருக்கு தாரை வார்க்கும் ஒன்றிய பாஜ அரசைக் கண்டித்து அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒன்றிய மோடி அரசு இந்திய -இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும், அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணியக் கூடாது, பொதுதுறைகளையும், பொது சேவைகளையும் தனியாரிடம் தாரை வார்க்க கூடாது, என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை...
கஞ்சா வியாபாரிகள் சிவகாசியில் கைது
சிவகாசி, ஆக.13: சிவகாசியில் போலீசார் நடத்திய சோதனையில் கஞ்சா வியாபாரிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். சிவகாசி ராஜதுரை நகர் கருமன்கோயில் அருகே மாரனேரி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்த ஐயப்பன் காலனி சேர்ந்த விக்னேஷ் குமார்(25) என்ற வாலிபரை கைது செய்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல்...
சமூக தணிக்கை கிராம சபை கூட்டம்
சிவகாசி, ஆக.13: சிவகாசி ஊராட்சி ஒன்றியம் எம்.புதுப்பட்டி ஊராட்சியில் 2024-25ம் நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் குறித்த சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. மூத்த குடிமகன் சீனிவாசன் தலைமை வகித்தார். தனி அலுவலரும் வட்டார வளர்ச்சி அலுவலருமான மீனாட்சி முன்னிலை வகித்தார். இத்திட்டம் குறித்தும் சமூக...
மதுபான கடைகள் ஆக.15ல் அடைப்பு
விருதுநகர், ஆக.13: விருதுநகர் மாவட்டத்தில் ஆக.15ல் மதுபான கடைகள் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் கலெக்டர் வெளியிட்ட தகவல்: விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள், எப்எல் 1, 2,3, 3ஏ, 3ஏஏ மற்றும் எப்எல் 11 மதுபான உரிமஸ்தலங்களை ஆக.15 சுதந்திர தினத்தில் தற்காலிகமாக மூட வேண்டும். மீறி செயல்படும்...
டிரான்ஸ்பார்மரில் பைக் மோதி வாலிபர் பலி
சிவகாசி, ஆக.12: சிவகாசி அருகே விளாம்பட்டியை சேர்ந்தவர் முனியான்டி மகன் லட்சுமணன்(23). இவர் ஓட்டலில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் வேலை முடிந்து தனது டூவீலரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். சிவகாசி -வெம்பக்கோட்டை ரோட்டில் வந்து கொண்டிருந்தபோது நிலைதடுமாறி டிரான்ஸ்பார்மரில் மோதி கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த லட்சுமணன் பரிதாபமாக...
புதிய சப்-கலெக்டர் சிவகாசியில் பதவியேற்பு
சிவகாசி, ஆக.12: சிவகாசியில் புதிய சப்-கலெக்டர் பதவியேற்றார். சிவகாசியில் பொறுப்பு ஆர்டிஓவாக பாலாஜி பணியாற்றி வந்தார். சிவகாசி சப் -கலெக்டராக முகமது இர்பான் என்பவரை தமிழக அரசு நியமனம் செய்தது. இந்நிலையில் புதிய சப் கலெக்டர் முகமது இர்பான் முறைப்படி நேற்று காலை பதவி ஏற்று கொண்டார். அவருக்கு சிவகாசி தாசில்தார் லட்சம் மற்றும் வருவாய்த்துறையினர்...
செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்: அசோகன் எம்எல்ஏ பங்கேற்பு
சிவகாசி, ஆக.12: செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இந்த முகாம்களில், மகளிருக்கான உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு, விண்ணப்பதாரர்களுக்கு வெறும் பத்து நிமிடங்களில் அனைத்து பணிகளும் முடித்துத் தரப்படுகின்றன. இது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சியில்...
ராஜபாளையம் சேத்தூரில் ரூ.6.66 கோடியில் திட்டப் பணிகள்: அமைச்சர் அடிக்கல் நாட்டினார்
ராஜபாளையம், ஆக.11: ராஜபாளையம் சேத்தூர் பேரூராட்சியில் ரூ.6.66 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். ராஜபாளையம் தொகுதியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு (2025-26) நிதி, கலைஞர் நகர்புற மேம்பாட்டுத்திட்டம் பொதுநிதி மூலம் ரூ.5.96 கோடி மதிப்பீட்டில் சேத்தூர் பேரூராட்சி பகுதியில் குளிர்சாதன வசதியுடன்கூடிய கூடிய திருமண மண்டபம்...