ஓடையில் மார்பளவு தண்ணீரில் இறங்கி சடலத்தை எடுத்து சென்ற உறவினர்கள் பாலம் அமைத்து தர வலியுறுத்தல்
திட்டக்குடி, டிச. 4: கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்துள்ள நாவலூர் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நாவலூர் கிராமத்தில் காத்திலிங்கம் என்பவர் உடல்நலக்குறைவால் நேற்று இறந்தார். அவரது உடலை இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லும் ஓடைப்பாதை முற்றிலும் சேதமடைந்து செல்வதற்கு வழியற்ற நிலையில் இருந்தது. மயானத்திற்கு செல்ல வேண்டுமெனில் ஓடையை...
மயிலம் முருகன் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா திரளான பக்தர்கள் தரிசனம்
மயிலம், டிச. 4: விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் மலையில் முருகன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நேற்று கார்த்திகை தீபத்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதையொட்டி நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு முருகனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து முருகன் வள்ளி தெய்வானையுடன் சிறப்பு...
நெல்லிக்குப்பம் அருகே தொழிலாளி மர்ம சாவு
நெல்லிக்குப்பம், டிச. 3: நெல்லிக்குப்பம் வான்பாக்கம் பகுதியில், கஸ்டம்ஸ் சாலை செல்லும் வழியில் உள்ள அங்காளம்மன் கோயில் அருகில் வயல்வெளியில் 32 வயது மதிக்கத்தக்க வாலிபர் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் காவல் ஆய்வாளர் முத்துக்குமரன் (பொ) மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கடலூர் மாவட்ட எஸ்பி...
நாட்டிலேயே சிறந்த 10 காவல் நிலையங்கள் தேர்வு பாகூர் காவல் நிலையத்துக்கு 8வது இடம்
பாகூர் டிச. 3: நாட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் சிறந்த 10 காவல் நிலையங்களை ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய அரசு அறிவித்து வருகிறது. இந்த விருது குற்றங்களை கண்டறிதல், குற்றவாளிகளை விரைந்து கைது செய்தல், குற்றத்தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுதல், சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்தல், விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபடுதல், சமுதாயப் பணிகளில் ஆர்வம் காட்டுதல், குற்ற பதிவேடுகளை...
புதுச்சேரியில் ரோடு ஷோவுக்கு 3வது முறையாக அனுமதி மறுப்பு விஜய்க்கு எதிராக பாஜ போர்க்கொடி
புதுச்சேரி, டிச. 3: . புதுச்சேரியில் நாளை மறுநாள் (5ம் தேதி) ரோடு ஷோ நடத்த தவெக தலைவர் விஜய் திட்டமிட்டு இருந்தார். புதுச்சேரி காலாப்பட்டில் தொடங்கி, கன்னியக்கோவில் வரையிலும் சுமார் 30 கி.மீ. வரை ரோடு ஷோ நடத்தவும், சோனாம்பாளையம் வாட்டர் டேங்க் அருகே மைக்கில் பேசவும் அனுமதி கேட்டு கடந்த வாரம் புதுச்சேரி...
சிதம்பரம் அருகே 5000 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம்
சிதம்பரம், நவ. 2: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கணக்கரப்பட்டு, நர்கந்தங்குடி, குமாரமங்கலம், வசபுத்தூர், நடராஜபுரம், உத்தம சோழமங்கலம், தெற்கு பிச்சாவரம், கீழப்பெரும்பை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 5000 ஏக்கர் விளைநிலங்களில் விவசாயிகள் நெற்பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன் புயல் காரணமாக இப்பகுதியில் கனமழை பெய்தது. இதனால் இப்பகுதியில் உள்ள...
விருத்தாசலத்தில் பரபரப்பு பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
விருத்தாசலம், டிச. 2: விருத்தாசலம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ஒருங்கிணைந்த பத்திரப் பதிவு துறை அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு விருத்தாசலம் மற்றும் சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பத்திர பதிவு சம்பந்தப்பட்ட பணிக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் இந்த அலுவலகத்தில்...
திண்டிவனம் அருகே ஓட்டலில் ஐ.டி. பெண் ஊழியர் தவறவிட்ட நகையை போலீசார் மீட்டு ஒப்படைப்பு
திண்டிவனம், டிச. 2: திண்டிவனம் அருகே உணவகத்தில் தவறவிட்ட 18 சவரன் நகை மற்றும் லேப்டாப் ஆகியவற்றை போலீசார் உரியவரிடம் ஒப்படைத்தனர். சென்னை தாம்பரம் லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த பிரசாந்த் மனைவி நளினி (28) ஐடி கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று காலை சென்னையில் இருந்து காரில் திருவண்ணாமலையில் உள்ள உறவினர் வீட்டின்...
திருவக்கரை அருகே கல்குவாரி ெகாத்தனார் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
வானூர், நவ. 29: திருவக்கரை கல்குவாரி குட்டையில் கொத்தனாரை கொலை செய்து தலை, கை மற்றும் கால்களை துண்டித்து உடலை வீசப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த திருவக்கரை பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான கல்குவாரி தண்ணீரில் கடந்த 23ம் தேதி தலை, கை, கால்கள்...