அரக்கோணம் போலீஸ் சப்-டிவிஷனில் நகரும் சோதனைச்சாவடி புதிய முயற்சி விரைவில் அறிமுகம்
அரக்கோணம், ஆக.18: ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதன்முதலாக அரக்கோணம் போலீஸ் சப்- டிவிஷனில் நகரும் சோதனைச்சாவடி அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் மற்றும் ராணிப்பேட்டை என 2 போலீஸ் சப்- டிவிஷன்கள் உள்ளது. இங்கு சட்டம் ஒழுங்கு, அனைத்து மகளிர், போக்குவரத்து என மொத்தம் 24 காவல் நிலையங்கள் உள்ளது. மாவட்டம் முழுவதும் எஸ்பி முதல் போலீசார் வரை 850க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.