கோர்ட்டில் ஆஜராகாத போக்சோ குற்றவாளி கைது: மைனர் பெண்ணிடம் காதல் டார்ச்சர்
வேலூர், அக்.26:போக்சோ வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்து வந்த குற்றவாளி கைது செய்யப்பட்டார்.வேலூர் சலவன்பேட்டையை சேர்ந்தவர் சிவரிஷி(20). இந்த ஆண்டு துவக்கத்தில் மைனர் பெண்ணிடம் காதல் டார்ச்சர் செய்ததாக வந்த புகாரின் பேரில், அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு சிவரிஷி கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.தொடர்ந்து கோர்ட் வழக்கு விசாரணையில் ஆஜராகி...
பல்வேறு வீடுகளில் 37 சவரன் திருடிய வழக்கில் அடகு கடை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
பேரணாம்பட்டு, அக்.26: பேரணாம்பட்டு பகுதியில் பல்வேறு வீடுகளில் நகை திருடிய வழக்கில் அடகு கடை உரிமையாளர் உள்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக வீடுகளில் ஆட்கள் இல்லாத நேரம் பார்த்து மர்ம நபர்கள் வீடுகளில் புகுந்து நகைகள், பணம் ஆகியவைகளை கொள்ளையடித்து சென்று வருவது வழக்கமாக...
காரில் கடத்திய 110 கிலோ குட்கா பறிமுதல் 2 பேர் கைது காட்பாடியில்
வேலூர், அக்.25: காட்பாடியில் காரில் 110 கிலோ குட்கா கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டத்தை போதை இல்லாத மாவட்டமாக மாற்ற எஸ்பி மயில்வாகனன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி மாவட்ட எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைத்து வேலூருக்கு வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுகிறது. இந்நிலையில் வடுகன்குட்டை...
இன்ஜினியரிங் சீட் வாங்கி தருவதாக மோசடி செய்தவர் கைது காட்பாடி தனியார் கல்லூரியில்
வேலுார், அக்.25: காட்பாடி தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் சீட் வாங்கி தருவதாக மோசடி செய்தவரை போலீசார் நேற்று கைது செய்தனர். சென்னையைச் சேர்ந்த ஒருவரின் மகளுக்கு, காட்பாடி தனியார் கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாகக் கூறி பொய்கையை சேர்ந்த இருவர் வேலூருக்கு அழைத்து வந்துள்ளனர். மேலும் அதற்கு 10 லட்சம் ரூபாய் செலவாகும் என்றும் கூறியுள்ளனர்....
மோர்தானா அணையில் இருந்து 2,000 கனஅடி உபரிநீர் வெளியேற்றம் எம்எல்ஏக்கள் மலர் தூவி வரவேற்பு கவுண்டன்யா மகாநதி வழியாக
குடியாத்தம், அக்.25: மோர்தானா அணையில் இருந்து வினாடிக்கு 2,000 கனஅடி உபரிநீர் கவுண்டன்யா மகாநதி வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. எம்எல்ஏக்கள் மலர் தூவி வரவேற்றனர். ஆந்திர- தமிழக எல்லையோரம் அமைந்துள்ள மோர்தானா அணை வேலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய அணையாகும். ஆந்திரா வனப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 24ம் தேதி மோர்தானா அணை...
3 ஆறுகள் ஒன்று சேர்ந்து தண்ணீர் கொட்டும் நீர் வீழ்ச்சி ரம்மியமாக காட்சியளிக்கிறது ஒடுகத்தூர் அடுத்த பீஞ்சமந்தை மலை கிராமத்தில்
ஒடுகத்தூர், அக்.24: ஒடுகத்தூர் அடுத்த பீஞ்சமந்தை மலை கிராமத்தில் 3 ஆறுகள் ஒன்று சேர்ந்து தண்ணீர் கொட்டும் நீர்வீழ்ச்சி ரம்மியமாக காட்சியளிக்கிறது. வேலூர் மாவட்டத்தில் குளிர்ச்சியாகவும், இயற்கை எழில் கொஞ்சும் மலை கிராமங்களில் ஒன்று ஜவ்வாதுமலை தொடரில் அமைந்துள்ள பீஞ்சமந்தை மலை கிராமம். இந்த மலை கிராமத்தில் 20க்கும் மேற்பட்ட கானாறுகள், 30க்கும் மேற்பட்ட ஓடைகள்...
பஸ்சில் 7 கிலோ குட்கா கடத்தி வந்த வாலிபர் கைது ஆந்திராவில் இருந்து
வேலூர், அக்.24: ஆந்திராவில் இருந்து பஸ்சில் 7 கிலோ குட்கா கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடியில் காட்பாடி போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திரா மாநிலம் சித்துாரில் இருந்து வேலூர் நோக்கி பஸ் வந்து வந்தது. அந்த பஸ்சை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில்,...
பள்ளத்தில் தவறி விழுந்து சிறுவன் பலி ஊராட்சி மன்ற நெற்களம் கட்டத் தோண்டிய
பொன்னை, அக். 24: காட்பாடி தாலுகா வள்ளிமலை அடுத்த அம்மவார்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் குப்பன். இவரது மனைவி ஜமுனா. இவர்களுக்கு ரேஷ்மா(8), ரமேஷ்(6), அன்பு (4) என மூன்று குழந்தைகள். அதில் ரமேஷும், அன்புவும் நேற்று பிற்பகல் அம்மவார்பள்ளி அரசு நடுநிலைப் பள்ளியில் இவர்களது அக்கா ரேஷ்மா படிக்கும் பள்ளிக்கு சென்று உள்ளனர். அப்போது பள்ளி...
குடியிருப்பு, பள்ளி வளாகத்தில் சூழ்ந்திருந்த வெள்ளம் ஜேசிபி மூலம் அகற்றம் கே.வி.குப்பம் அருகே
கே.வி.குப்பம்,அக்.23: கே.வி.குப்பம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் காவனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் மழை வெள்ளம் சூழ்ந்திருந்தது. அதே போல் பவளத்துறை, தாமோதரன் பேட்டை உள்ளிட்ட பகுதியில் உள்ள சுமார் 30க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் சுமார் 3 அடி அளவில் சூழ்ந்திருந்தது. இதனால் அப்பகுதி மக்கள்...