சங்கரன்கோவில் அருகே புத்தர் கோயிலில் உலக அமைதி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம்
சங்கரன்கோவில், ஜூலை 28: சங்கரன்கோவில் வட்டம் வடக்கு புதூரில் அமைந்திருக்கும் வேல்ஸ் பப்ளிக் பள்ளியின் சார்பில் வீரிருப்பில் அமைந்துள்ள புத்தர் கோயிலில் பள்ளியில் பயிலும் 9ம் வகுப்பு மாணவ-மாணவிகள் பங்கேற்ற சுற்றுப்புறச்சூழல் மற்றும் உலக அமைதி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் மாணவ, மாணவிகள் கோயிலின் சுற்றுப்புறத்தை தூய்மை செய்தனர். கோயிலின் சுற்றுப்புறத்தில் மரக்கன்றுகளை நட்டனர். முகாமின் சிறப்பு நிகழ்வாக உலக அமைதி வேண்டி சிறப்பு ஆராதனை நடைபெற்றது. முகாமிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் தாளாளர் சண்முகசாமி, முதல்வர் ஜெயபாரதி, துணை முதல்வர் அகல்யா ஆகியோர் செய்திருந்தனர்.