மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கல்

விகேபுரம்,டிச.10: விகேபுரம் டாணா தேசிய துவக்கப்பள்ளி ஆசிரியர், மாணவர்கள் மூலம் மாதந்தோறும் மரக்கன்றுகள் வழங்கி வருகிறார். மாணவர்கள் தாங்கள் வசிக்கும் தெருக்களில் உள்ள வீடுகளுக்கு சென்று அவர்களுக்கு தேவைப்படும் மரக்கன்றுகளை பட்டியலிட்டு தங்களது வகுப்பு ஆசிரியர் ஆபேல் சேத்துடன் இணைந்து அவர்கள் இல்லங்களுக்கே சென்று மாதந்தோறும் வழங்கி பசுமை புரட்சி செய்து வருகிறார். அதன்படி மாணவர்களுக்கு...

நெல்லை மாவட்டத்தில் தொடர் மழையால் அழிந்த உளுந்து பயிர்களுக்கு நிவாரண தொகை

By Karthik Yash
10 hours ago

நெல்லை, டிச.10: நெல்லையில் மாவட்டத்தில் தொடர்ச்சியான மழையின் காரணமாக உளுந்து பயிர்கள் அழிந்ததால் அதற்குரிய நிவாரண தொகையை அரசு விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அனைதது விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவினர் கலெக்டரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாவட்ட செயலாளர் ஆபிரகாம் மற்றும் விவசாயிகள் கலெக்டரிடம்...

திருக்குறுங்குடி அரசு பள்ளியில் மாணவர்களுக்கு கைக்கடிகாரம் வழங்கல்

By Karthik Yash
10 hours ago

களக்காடு, டிச.10: தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு களக்காடு அருகே திருக்குறுங்குடி டிவிஎஸ் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் 92 மாணவ-மாணவியருக்கு திருக்குறுங்குடி நகர திமுக சார்பில் கைக்கடிகாரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. களக்காடு வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வகருணாநிதி தலைமை தாங்கி மாணவர்களுக்கு கைக்கடிகாரம் வழங்கினார். நிகழ்ச்சியில்...

செங்கோட்டை பாரில் இரு தரப்பினர் மோதல்

By Karthik Yash
08 Dec 2025

செங்கோட்டை, டிச. 9: செங்கோட்டை பாரில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் கொல்லம்- திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையோரம் புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தனியார் பார் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று மது குடிக்க வந்த செங்கோட்டை மற்றும் கட்டளை குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த...

மேலகரம், குற்றாலம் ராமாலயம் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

By Karthik Yash
08 Dec 2025

தென்காசி,டிச.9: மேலகரம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் குற்றாலம் ராமாலயம் பண்பொழி திருமலைக் குமாரசாமி கோயில் தேவஸ்தான பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா மேலகத்தில் பேரூராட்சி தலைவர் வேணி வீரபாண்டியன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் ஜீவானந்தம், திமுக பேரூர் செயலாளர்கள் மேலகரம் சுடலை, குற்றாலம் குட்டி, ஒன்றியச் செயலாளர் அழகுசுந்தரம் முன்னிலை...

களக்காட்டில் குளத்தில் தவறிவிழுந்தவர் தண்ணீரில் மூழ்கி சாவு

By Karthik Yash
08 Dec 2025

களக்காடு, டிச.9: களக்காட்டில் குளத்தில் தவறிவிழுந்த முதியவர், நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். நெல்லை மாவட்டம், களக்காடு கக்கன் நகரை சேர்ந்தவர் வேல்மயில் (68). இவரது மனைவி சரோஜா. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். கக்கன்நகரில் பெட்டிக்கடை நடத்தி வந்த வேல்மயில், நேற்று முன்தினம் அவர் களக்காடு பஸ் நிலையத்திற்கு பொருட்கள் வாங்க...

பாபர் மசூதி இடிப்பு தினம் பத்தமடையில் எஸ்டிபிஐ கண்டன ஆர்ப்பாட்டம் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

By Arun Kumar
07 Dec 2025

  வீரவநல்லூர், டிச.8: பத்தமடையில் பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு நடந்த எஸ்டிபிஐ கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். பத்தமடையில் பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு எஸ்டிபிஐ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சிராஜ் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் சுலைமான், அமைப்பு பொதுச் செயலாளர்...

திசையன்விளை பெரியம்மன் கோவிலில் நகை திருட்டு

By Arun Kumar
07 Dec 2025

  திசையன்விளை, டிச. 8:திசையன்விளை செல்வமருதூர் பெரியம்மன் கோவிலில் காலை பக்தர்கள் தரிசனத்திற்காக கோவிலை அர்ச்சகர் திறந்து வைத்தார். பின்னர் அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு அர்ச்சகர் சென்றுவிட்டு மீண்டும் பெரியம்மன் கோவிலுக்கு வந்தார். அப்போது முத்தாரம்மன், மாரியம்மன், உச்சினிமாகாளி அம்மன் சிலைகளில் உள்ள தங்கத்தாலி திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து அர்ச்சகர் கோவில் நிர்வாகத்திடம்...

பழவூரில் இன்று மின்தடை அறிவிப்பு

By Arun Kumar
07 Dec 2025

  தியாகராஜ நகர், டிச.8:பழவூர் காற்றாலை பண்ணை உதவி செயற்பொறியாளர் ஸ்ரீகலா விடுத்துள்ள செய்திகுறிப்பு: பழவூர் துணை மின்நிலையத்தில் இன்று 8ம்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் பழவூர் மின் விநியோகத்துக்குட்பட்ட ஆவரைக்குளம், அம்பலவாணபுரம், பழவூர், யாக்கோபுபுரம், சிதம்பரபுரம், சிவஞானபுரம் ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி...

களக்காட்டில் இந்து அமைப்பினர் மறியல் 39 பேர் கைது

By Karthik Yash
05 Dec 2025

களக்காடு, டிச.5: திருப்பரங்குன்றத்தில் கோர்ட் உத்தரவை அமல்படுத்த வலியுறுத்தி களக்காட்டில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்து அமைப்பினர் 39 பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பரங்குன்றம் மலையில் கோர்ட் உத்தரவுபடி தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று போராட்டம் நடத்திய பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கைது செய்யப்பட்டார். இதனை கண்டித்தும், திருப்பரங்குன்றத்தில் கோர்ட்...