வரும் செப்.30ம் தேதி வரை சேரன்மகாதேவி நீதிமன்றத்தில் சமரச தீர்வு முகாம்
வீரவநல்லூர்,ஜூலை 31: சேரன்மகாதேவி நீதிமன்றத்தில் செப்.30ம் தேதி வரை சமரச தீர்வு முகாம் நடைபெறுகிறது. தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு, தமிழ்நாடு சமரச தீர்வு மையம் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு ஏற்பாட்டின் பேரில் சேரன்மகாதேவி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சிறப்பு சமரச தீர்வு முகாம் நடந்து வருகிறது. செப்.30 வரை நடைபெறும் இந்த சமரச தீர்வு முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காணலாம். இதுதொடர்பாக விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் நீதிமன்ற வளாகத்தில் விநியோகம் செய்யப்பட்டது. நீதிபதி அருண் சங்கர் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இதில் வக்கீல் சங்கத் தலைவர்கள், சமரசர்கள் மற்றும் இதர வக்கீல்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.