ராதாபுரம் லெப்பைகுடியிருப்பில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்
பணகுடி, ஜூலை 30: ராதாபுரம் லெப்பை குடியிருப்பில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமை சபாநாயகர் அப்பாவு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். ராதாபுரம் தொகுதி லெப்பைகுடியிருப்பில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடந்தது. முகாமை சபாநாயகர் அப்பாவு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், உங்களுடன் ஸ்டாலின் என்னும் திட்டம் மக்களை தேடி ஓரே இடத்தில் அரசு அதிகாரிகள் வந்து உங்கள் குறைகளை சரி செய்து வரும் திட்டம், இதை மக்கள் பயன்படுத்தி தங்களின் குறைகளை சரி செய்து கொள்ள வேண்டும். மேலும் தமிழகத்திலேயே நமது தொகுதிக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் முதலமைச்சர் ஸ்டாலின் மேலும் பல திட்டங்களை தர தயாராக உள்ளார் என்றார்.முகாமில் வட்டார மருத்துவர் கோலப்பன், தாசில்தார் மாரிச்செல்வம், மாவட்ட கவுன்சிலர் பாஸ்கர், சாந்தி சுயம்புராஜ், ஒன்றிய கவுன்சிலர் கோசிஜின், ஊராட்சி மன்ற தலைவர் இந்திரா சம்பு, மின்வாரிய பொறியாளர் ஜெகதீஷ், அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் இசக்கியப்பன், கிராம நிர்வாக அலுவலர் இசக்கியப்பன், விஜய் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். காலை 7 மணிக்கு வந்து தங்கள் பணிகளை மேற்கொண்ட அரசு அலுவலர்களுக்கு சபாநாயகர் அப்பாவு காலை, மதிய உணவுக்கு ஏற்பாடு செய்து இருந்தார்.இதையொட்டி நடந்த மருத்துவ முகாமை தொடங்கி வைத்த சபாநாயகர் அப்பாவு தானும் உடல் பரிசோதனை செய்து கொண்டார்.