நீர்பிடிப்பு பகுதியில் சாரல் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு
தென்காசி,ஆக.2: குற்றாலத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் நீர் பிடிப்பு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவில் பெய்த சாரல் காரணமாக அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுகிறது. இதனால் அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். குற்றாலத்தில் நேற்று பகல் வேளையில் சாரல் இல்லை. லேசான வெயில் காணப்பட்டது. மாலையில் சற்று இதமான காற்று வீசியது. சாரல் இல்லாத போதும் அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுகிறது. நேற்று முன்தினம் இரவில் மேற்கு தொடர்ச்சி மலையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த சாரல் காரணமாக அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுகிறது. மெயினருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் தண்ணீர் பரந்து விழுகிறது. ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. பழைய குற்றால அருவியிலும் ஓரளவு நன்றாக தண்ணீர் விழுகிறது. புலி அருவி, சிற்றருவி ஆகியவற்றிலும் ஓரளவு நன்றாக தண்ணீர் விழுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.