வட்டார அளவிலான விளையாட்டு போட்டியில் கலைவாணி மெட்ரிக் பள்ளி சாதனை
திருவேங்கடம், ஜூலை 28: திருவேங்கடம் அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில் சங்கரன்கோவில் வட்டார அளவிலான விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வாலிபால் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் 6 அணிகள் முதலிடமும், எறிபந்து போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் 6 அணிகள் முதலிடமும், பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் 6 அணிகள் முதலிடமும், டென்னிக்காய்ட் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் ஆட்டத்தில் முதலிடம் பிடித்தது.
சதுரங்கப் போட்டியில் பெண்கள் சப் ஜூனியர் பிரிவில் ஹம்சிகா முதலிடமும், காருண்யாநிதி ஜூனியர் பிரிவில் முதலிடமும், ஜனனி சீனியர் பிரிவில் முதலிடமும், சூப்பர்சீனியர் பிரிவில் சுபத்ரா தேவி முதலிடமும், பிரியங்கா 2ம் இடமும், ஆண்கள் சப் ஜூனியர் பிரிவில் அஜிவ் 2ம் இடமும், செல்வ பிரதாப் 3ம் இடமும், ஜூனியர் பிரிவில் பிரஜின் 3ம் இடமும், சீனியர் பிரிவில் ராம்குமார் முதலிடமும், ஹர்சத் கண்ணன் 2ம் இடமும், சூப்பர் சீனியர் பிரிவில் அனிஷ் பர்னாபா முதலிடமும், முத்துராம் 2ம் இடமும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி முதல்வர் பொன்னழகன் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.