சேரன்மகாதேவியில் உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி
வீரவநல்லூர்,ஜூலை 29: சேரன்மகாதேவியில் சுகாதாரத்துறை சார்பில் உலக மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. சேரன்மகாதேவியில் சுகாதாரத்துறை, பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை சேரன்மகாதேவி இன்ஸ்பெக்டர் தர்மராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார். பள்ளி முன்பு துவங்கிய பேரணியானது முக்கிய வீதிகள் வழியாக சென்று பஸ் நிலையத்தில் முடிவடைந்தது. பேரணியின் போது விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. இதில் தலைமையாசிரியர் பெருமாள், வட்டார மருத்துவ அலுவலர் ரமேஷ், சுகாதார மேற்பார்வையாளர் சிதம்பரம், சுகாதார புள்ளியிலாளர் பொன்செல்வி, ஆல்தி சில்ரன் தொண்டு நிறுவனத்தினர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.