கீழப்பாவூர் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
பாவூர்சத்திரம், ஜூலை 26: கீழப்பாவூர் பேரூராட்சியில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன், பேரூராட்சி தலைவர் ராஜன் பங்கேற்றனர். கீழப்பாவூர் பேரூராட்சி சமுதாய நலக்கூடத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. தலைமை வகித்த பேரூராட்சி தலைவர் ராஜன் முகாமை குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார். பேரூராட்சி துணைத்தலைவர் ராஜசேகர், செயல் அலுவலர் மாணிக்கராஜ் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் முகாமை பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.
இதில் கீழப்பாவூர் வடக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் பொன்செல்வன், பேரூர் செயலாளர் ஜெகதீசன், வார்டு உறுப்பினர்கள் விஜிராஜன், முத்துச்செல்வி ஜெகதீசன், இசக்கிமுத்து, ஜெயசித்ரா குத்தாலிங்கம், ஜாஸ்மின் யோவான், சாமுவேல்துரைராஜ், பவானி இலக்குமணத் தங்கம், அன்பழகு சின்னராஜா, கனக பொன்சேகா, இசக்கிராஜ், கோடீஸ்வரன் , ராதாவிநாயகபெருமாள், மாலதி முருகேசன், மற்றும் தங்கசாமி, ராமசாமி, மலைச்சாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முகாமில் பங்கேற்ற மக்களிடம் இருந்து பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கோரிக்கை மனுக்கள் பெற்றனர்.