மறு அறிவிப்பு வரும் வரை நெல் மூட்டை கொண்டுவர வேண்டாம் வியாபாரிகள் வேலை நிறுத்தத்தால் நிர்வாகம் முடிவு சேத்துப்பட்டு மார்க்கெட் கமிட்டிக்கு
சேத்துப்பட்டு ஜூலை 30: தமிழகத்தில் உள்ள மார்க்கெட் கமிட்டிகளில் மின்னணு தேசிய வேளாண் சந்தை இனாம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் விவசாயிகளின் விலை பொருட்கள் ஏலம் விடப்பட்டு விவசாயிகள் வங்கி கணக்குக்கு மூலம் பணம் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஒழுங்குமுறை விற்பனை கூட அனைத்து வேளாண் விலை பொருள் வணிகர்கள் மற்றும் முகவர்கள் கூட்டம் கடந்த திங்கட்கிழமை விழுப்புரத்தில் கலந்து கொண்டு இனாம் திட்டத்தை கைவிட கோரி காலவரையற்ற வேலை நிறுத்தம் ஏலத்தில் பங்கேற்க போவதில்லை என்று முடிவு செய்தனர். அதன்படி இன்று முதல் கால வரையற்றமுறையில் மறைமுக ஏலத்தில் கலந்து கொள்வதில்லை என முடிவு செய்துள்ளனர். இதன் அடிப்படையில் சேத்துப்பட்டு மார்க்கெட் கமிட்டியில் விவசாயிகளின் விலை பொருட்களை வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொள்ளாததால் மறு அறிவிப்பு வரும் வரைநெல் மூட்டைகளை கொண்டு வர வேண்டாம் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தி அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது.