ரிஷபேஸ்வரர் கோயிலில் இருப்பது அகத்திய முனிவரின் ஜீவ சமாதி தான் ஆய்வில் தெரியவந்ததாக இணை ஆணையர் தகவல் செங்கத்தில் 1,600 ஆண்டுகள் பழமை வாய்ந்த

செங்கம், டிச. 10: செங்கத்தில் சுமார் 1,600 ஆண்டுகள் பழமை வாய்ந்த ரிஷபேஸ்வரர் கோயிலில் இருப்பது அகத்திய முனிவரின் ஜீவ சமாதி தான் என ஆய்வில் தெரியவந்தது என்று இணை ஆணையர் தெரிவித்தார். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகரில் சுமார் 1,600 ஆண்டுகள் பழமை வாய்ந்த அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரர் கோயில் உள்ளது. மத்திய தொல்லியல்...

கத்தியை காட்டி போலீசை மிரட்டிய வாலிபர் கைது நடுரோட்டில் ரகளை செய்து

By Karthik Yash
8 hours ago

செய்யாறு, டிச. 10: செய்யாறு அருகே நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்டு, தட்டிக்கேட்ட போலீசுக்கு கத்தியை காட்டி மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை காழியூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வாலிபர் ஒருவர், நடுரோட்டில் கையில்...

சூதாடிய 4 பேர் கைது பைக்குகள் பறிமுதல் செய்யாறு அருகே

By Karthik Yash
8 hours ago

செய்யாறு, டிச. 10: செய்யாறு அருகே சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்து 4 பைக்குகளுடன் பணத்தை பறிமுதல் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது உக்கல் கிராமத்தில் சுடுகாட்டு அருகில் பணம் வைத்து சூதாடி...

தொடர்ந்து அலைமோதும் பக்தர்கள் கூட்டம் 5 மணிநேரம் காத்திருந்து தரிசனம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்

By Karthik Yash
08 Dec 2025

திருவண்ணாமலை, டிச. 9: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அலை மோதுவதால் நேற்றும் 5 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீப திருவிழா கடந்த 3ம் தேதி நடந்து முடிந்தது. அதைத்தொடர்ந்து, வரும் 13ம் தேதி வரை மலை மீது...

அன்புமணி ராமதாஸ் சுவாமி தரிசனம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்

By Karthik Yash
08 Dec 2025

திருவண்ணாமலை, டிச. 9: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சுவாமி தரிசனம் செய்தார். திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா நிறைவடைந்துள்ள நிலையில், மலை மீது மகா தீபம் தொடர்ந்து காட்சி அளிக்கிறது. அதன்படி, நேற்று 6வது நாளாக காட்சி அளித்தது. அதையொட்டி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவரது மனைவி சவுமியா...

போஸ்டர் ஒட்டிய இருதரப்பினர் மீது வழக்கு திருப்பரங்குன்றம் சம்பவம்

By Karthik Yash
08 Dec 2025

வந்தவாசி, டிச. 9: திருப்பரங்குன்றம் மலைமீது தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து அரசை கண்டித்து போராட்டம் என இந்து முன்னணி சார்பில் நேற்று வந்தவாசி டவுன், சன்னதி தெரு, தேரடி பழைய பஸ் நிலையம், காந்தி சாலை உள்ளிட்ட பகுதிகளில் போஸ்டர் ஒட்டப்பட்டது. அதன் அருகே அமைதி நிலவும் தமிழ்நாட்டில் முருகர் பெயரில் மத...

மேல் செங்கம் பகுதியில் உள்ள 10 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதியில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க வேண்டும்: மக்களவையில் எம்பி அண்ணாதுரை கோரிக்கை

By Arun Kumar
07 Dec 2025

  திருவண்ணாமலை, டிச.8:மேல் செங்கம் பகுதியில் உள்ள பத்தாயிரம் ஏக்கர் வனப்பகுதியில் மூலிகை மற்றும் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க வேண்டும் என எம்பி அண்ணாதுரை வலியுறுத்தியுள்ளார். மக்களவையில் நடந்த கேள்வி நேரத்தின் போது, திருவண்ணாமலை தொகுதி எம்பி சி.என்.அண்ணாதுரை தெரிவித்ததாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மேல்செங்கம் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக சுமார் 10 ஆயிரம்...

நேற்று விடுமுறை தினத்தையொட்டி சாத்தனூர் அணையில் திரண்ட மக்கள்

By Arun Kumar
07 Dec 2025

  தண்டராம்பட்டு, டிச.8: திருவண்ணாமலை மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள சாத்தனூர் அணையானது 119 அடி நீர்மட்டம் கொண்டது. இந்த அணையின் பாசனத்தை நம்பி திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி நடைபெறுகிறது.மேலும், 3 மாவட்டங்களிலும் 88 ஏரிகள் மற்றும் திருக்கோவிலூர் பழைய ஆயக்கட்டு பாசன பகுதியில்...

திருவண்ணாமலை தீபத்திருவிழா நிறைவாக சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்தில் பவனி

By Arun Kumar
07 Dec 2025

  திருவண்ணாமலை, டிச.8: திருவண்ணாமலையில் விமரிசையாக நடந்த கார்த்திகை தீபத்திருவிழாவின் நிறைவாக நேற்று இரவு சண்டிகேஸ்வரர் உற்சவம் நடைபெற்றது. மேலும், மலைமீது தீபம் 5வது நாளாக காட்சியளித்தது.திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கடந்த மாதம் 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடந்தது. விழாவின் முக்கிய நகழ்வுகளான வெள்ளித் தேரோட்டம் 29ம் தேதியும், மகா தேரோட்டம் 30ம்...

முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் வேளாண் சங்கம் நிகழ்ச்சி முன்னேற்பாடுகளை வேளாண் துறை செயலாளர் ஆய்வு திருவண்ணாமலையில் இந்த மாத இறுதியில்

By Karthik Yash
06 Dec 2025

திருவண்ணாமலை, டிச. 7: திருவண்ணாமலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் வேளாண் சங்கம் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேளாண்துறை அரச செயலாளர் நேரடி ஆய்வு செய்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த மாத இறுதியில் நடைபெறும் பல்வேறு அரசு நிழ்ச்சிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ள இருக்கிறார். அப்போது, நிறைவேற்றப்பட்ட அரசு திட்டங்களை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்ட...