மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி எ.வ.வே.கம்பன் தொடங்கி வைத்தார்
திருவண்ணாமலை, ஆக.16: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியை எ.வ.வே.கம்பன் தொடங்கி வைத்தார்.
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி நேற்று நடந்தது. திருவண்ணாமலை மாவட்ட அமெச்சூர் குத்துச்சண்டை சங்கத்தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். செயலாளர் மணிமாறன் முன்னிலை வகித்தார். மாநகர பகுதி செயலாளர் கோவிந்தன் வரவேற்றார்.