எலக்ட்ரிக் கடையில் போதை பொருட்கள் பதுக்கி விற்றவர் கைது
ஆரணி, ஜூலை 25: எலக்ட்ரிக் கடையில் போதை பொருட்கள் பதுக்கி விற்றவரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த வண்ணாங்குளம் சிசி ரோட்டில் உள்ள ஒரு எலக்ட்ரிக் கடையில் ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பதாக கண்ணமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, எஸ்ஐ தர்மலிங்கம் மற்றும் போலீசார் வண்ணாங்குளம் சிசி ரோடு பகுதியில் உள்ள எலக்ட்ரிக் கடையில் சோதனை நடத்தியதில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பது தெரியவந்தது.
தொடர்ந்து போலீஸ் விசாரணை நடத்தியதில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேந்திரன்(48), என்பது தெரியவந்தது. உடனே போலீசார் கடையில் பதுக்கி வைத்திருந்த போதை பொருட்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்து, ஆரணி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.