தண்டராம்பட்டு அருகே பரபரப்பு: செப்டிக் டேங்கில் பயங்கர சத்தத்துடன் வெளியேறிய காஸ்
தண்டராம்பட்டு, ஜூலை 28: தண்டராம்பட்டு அருகே செப்டிக் டேங்கில் இருந்து பயங்கர சத்தத்துடன் காஸ் வெளியேறிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. தண்டராம்பட்டு அடுத்த தச்சம்பட்டு காவல் நிலையம், வருவாய் அலுவலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மார்க்கெட் கமிட்டி ஆகிய கட்டிடங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் தேக்கி வைப்பதற்காக காவல் நிலையம் எதிரே செப்டிக் டேங்க் உள்ளது.
இந்நிலையில், நேற்று மாலை இந்த செப்டிக் டேங்கில் இருந்து திடீரென பயங்கர வெடி சத்தத்துடன் காஸ் வெளியேறியது. சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். செப்டிக் டேங்கில் இருந்து காஸ் வெளியேறுவதற்கு எந்த பைப்பும் வைக்காததால், பயங்கர சத்தத்துடன் காஸ் வெளியேறியது தெரியவந்தது. இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.