ரோட்டில் மரம் முறிந்து விழுந்து ஸ்கூட்டரில் சென்ற தந்தை, மகன் படுகாயம்
திருப்பூர், ஜூலை 25: திருப்பூர், ஷெரீப்காலனி பகுதியில் ஏராளமான வீடுகள், பள்ளிக்கூடங்கள், வணிக வளாகங்கள் உள்ளது. செரீப் காலனி பகுதியில் ரோட்டில் இருபுறமும் மரங்கள் நிறைந்துள்ளது. இந்நிலையில் நேற்று ரோட்டோரம் இருந்த ஒரு மரம் முறிந்து விழுந்தது. இதில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த தாராபுரம் ரோட்டை சேர்ந்த குமார் (47), தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் அவரது மகன் சஸ்வந்த் (13) ஆகிய இருவரும் காயம் அடைந்தனர்.
மரம் விழுந்ததில் ஸ்கூட்டரும் சேதம் அடைந்தது. அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ரோட்டில் விழுந்த மரத்தை, அதிகாரிகள் அப்புறப்படுத்தினர்.