பெம் பள்ளியில் எக்சலோரா 2025
திருப்பூர், டிச.8: பூமலரில் உள்ள பெம் ஸ்கூல் ஆப் எக்ஸலென்ஸ் பள்ளியில் கடந்த 7ம் தேதி எக்சலோரா 2025 திறன் மேம்பாட்டு போட்டி இந்த கல்வி ஆண்டின் முக்கிய நிகழ்வாக நடைபெற்றது. மாணவர்களின் திறன்களை கண்டறிந்து ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்த நிகழ்வு சிறப்பு மிக்க வகையில் நடைபெற்றது. மழலையர் பிரிவு முதல் 8ம் வகுப்பு வரை...
ஐயப்பன் கோயில் கும்பாபிஷேகம்
உடுமலை, டிச. 8: மடத்துக்குளம் அருகேயுள்ள சர்க்கார் கண்ணாடிபுத்தூர் ஐயப்பன் சாமி கோயில் மகா கும்பாபிஷகம் நேற்று நடைபெற்றது. 6-ம் தேதி முளைப்பாரி வீதி உலா, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, சுதர்சன ஹோமம், பூர்ணாகுதி, ரக்ணா பந்தனம், திரவ்யாகுதி, யந்திர ஸ்தாபனம், சாமி நிலை நாட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள்...
உடுமலை பகுதியில் கொண்டைக்கடலை சாகுபடி தீவிரம்
உடுமலை, டிச. 7: பனிக்காலமான டிசம்பர், ஜனவரி மாதங்கள் கொண்டைக்கடலை சாகுபடிக்கு ஏற்ற மாதங்களாகும். இதையடுத்து, உடுமலை பகுதியில் விவசாயிகள் கொண்டைக்கடலை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, ராகல்பாவி, வடபூதனம், ஆர்.வேலூர், வாளவாடி, பண்ணை கிணறு உள்ளிட்ட இடங்களில் பலநூறு ஏக்கரில் கொண்டைக்கடலை சாகுபடி செய்துள்ளனர். மேலும், காட்டுப்பன்றிகளிடம் இருந்து பயிர்களை பாதுகாப்பதற்காக தோட்டத்தை சுற்றிலும்...
எலையமுத்தூரில் குப்பை குவியல்; மக்கள் அவதி
உடுமலை, டிச. 7: உடுமலை அருகேயுள்ள எலையமுத்தூரில் சாலையோரம் மலைபோல் குப்பை குவிந்து காணப்படுகிறது. இந்த ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை செயல்பாட்டில் இல்லை. உரிய இடங்களில் குப்பை தொட்டிகளும் வைக்கப்படவில்லை.இதனால், பொதுமக்கள் குப்பைகளை சாலையோரம் வீசி செல்கின்றனர். இவற்றால் சாலையில் செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. இறைச்சிக்கழிவுகளை நாய்கள், பறவைகள் கிளறி ரோட்டில்...
முத்தூர் ஒழுங்குமுறை கூடத்தில் ரூ.1.92 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்
வெள்ளகோவில், டிச. 7: முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் டெண்டர் முறையில் தேங்காய் ஏலம் நடைபெறுகிறது. முத்தூர் சுற்றுவட்டார விவசாயிகள் 30 பேர், நேற்று 10,800 தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஏலத்தில் முதல் தரம் ஒரு கிலோ ரூ.68.90க்கும், இரண்டாம் தரம் ஒரு கிலோ ரூ.34க்கும், சராசரி ரூ.56க்கும், மொத்தம்...
மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம்
திருப்பூர், டிச. 6: தமிழக அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால், அவர்களது வாழ்வாதாரமும் உயா்ந்து வருகிறது. இந்த உதவிகள் பெற அடையாள அட்டை மிகவும் அவசியம். இதனை பெறும் வகையில் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாம்...
எகோ பசுமை மராத்தான் போட்டி
திருப்பூர், டிச. 6: திருப்பூர் திருமுருகன்பூண்டி சுகன் சுகா மெடிக்கல் சென்டர் மற்றும் சாய் கிருபா மெடி டிரஸ்ட் சார்பில் எகோ பசுமை மராத்தான் போட்டி நாளை(7-ம் தேதி) நடக்கிறது. இப்போட்டி சுற்றுச்சூழல் பாதுகாப்பு, போதை இல்லா தமிழகம் உருவாக்கும் வகையில், திருமுருகன் பூண்டி சுகன் சுகா மெடிக்கல் சென்டர் வளாகத்தில் நாளை காலை...
பெட்டிக்கடையில் திருடிய வாலிபருக்கு 7 மாதம் சிறை
திருப்பூர், டிச. 6: திருப்பூர் கோல்டன் நகர் பகுதியை சேர்ந்தவர் சத்தியராஜ் (36). இவர் 2-வது ரயில்வே கேட் பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். கடந்த மே மாதம் 1-ம் தேதி இரவு இவருடைய பெட்டிக்கடையின் பூட்டு உடைக்கப்பட்டு ரூ.4 ஆயிரத்து 100, ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள பீடி, சிகரெட், தின்பண்டங்கள் ஆகியவை திருட்டு போனது....
நிதி நிறுவனத்தினர் மீது நடவடிக்கை கோரி மனு
திருப்பூர்,டிச.5: திருப்பூர், தாராபுரம் கொளத்துப்பாளையம் அடுத்த கருங்காளிவலசு பகுதியை சேர்ந்த சங்கீதா என்பவர் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் கூலி வேலை செய்து வருகிறேன். குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனியார் நிதி நிறுவனத்தில் வார வட்டிக்கு ரூ.10 ஆயிரம் கடனாக பெற்றிருந்தேன். வாரத்தவணையாக...