பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை நீடிப்பு
உடுமலை, ஜூலை 28: மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழையின் காரணமாக உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் கொட்டுகிறது. நேற்று முன்தினம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோயில் வளாகத்தை சூழ்ந்தபடி தண்ணீர் சென்றது. இதனால், சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், நீர்வரத்து பாதுகாப்பான அளவில் இல்லை என்பதால் அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களுக்கு நேற்றும் அனுமதி மறுக்கப்பட்டது. அதேநேரம், அமணலிங்கேஸ்வரர் திருக்கோயில் பகுதியில் தோணி ஆற்றில் நீர் வரத்து பாதுகாப்பான அளவில் உள்ளது. இதனால், பக்தர்கள் கோயில் முன்புள்ள தடாகத்தில் குளித்தனர். கோயில் வளாகத்தை பணியாளர்கள் சுத்தப்படுத்தினர். கோயிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.