திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் யோகா பயிற்சி
திருச்சி, ஜூலை 25: திருச்சி மாவட்ட மைய நூலகத்தில், வாசகர் வட்டம் மற்றும் நூலகம் சார்பில் யோகா பயிற்சி நேற்று அளிக்கப்பட்டது. யோகா ஆசிரியர்கள் தனசேகர், ரேணுகாதேவி ஆகியோர் கலந்துகொண்டு அடிப்படை யோகா பயிற்சி அளித்தனர். பயிற்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். யோகா பயிற்சி வாரம்தோறும் வியாழக்கிழமைகளில் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறும். அபோல் வரும் ஞாயிறு காலை 10மணிக்கு அறிவும் ஆற்றலும் என்ற சிறாருக்கான நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அமுதா பயிற்சி அளிக்க உள்ளார். அன்று காலை 10 மணிக்கு நலமும் வளமும் என்ற முதியோருக்கான நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
இதில் சித்த மருத்தவர் டாக்டர் காமராஜ் கலந்துகொண்டு மூட்டு வலி குறித்து ஆலோசனை வழங்க உள்ளார். மேலும் இலவச மருத்துவ பரிசோதனை முகாமும் நடைபெற உள்ளது. இதில் ரத்த அழுத்தம், சக்கரை அளவு, உடல் எடை போன்றவற்றை பரிசோதித்து பயன்பெறலாம். இந்த தகவலை மாவட்ட நூலக அலுவலர் சரவணகுமார் தெரிவித்துள்ளார்.