நெல்லை ஆணவ படுகொலை கண்டித்து ஆர்ப்பாட்டம்
திருச்சி, ஆக. 5: நெல்லை இளைஞர் ஆணவ படுகொலையை கண்டித்து மக்கள் கலை இலக்கிய கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளா் முன்னணி மற்றும் கூட்டமைப்புகள் சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினா். மக்கள் கலை இலக்கிய கழகம், புதிய ஜனநாயக தொழிலாளா் முன்னணி மற்றும் கூட்டமைப்புகள் சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே...
கஞ்சா விற்ற 4 பேர் கைது
திருச்சி ஆக 5: திருச்சி பாலக்கரை ஆலம் தெரு பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருப்பதாக பாலக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சோதனை நடத்தி கே.கே. நகர் எல்ஐசி காலனி பகுதியை சேர்ந்த சக்திவேல் (25) என்ற வாலிபரை கைது செய்தனர். அவரிடமிருந்து 20 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல...
கருப்பர் கோயிலில் ஆடிப்படையல் விழா
துவரங்குறிச்சி, ஆக.4: திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த கஞ்சநாயக்கன்பட்டி அருகே உள்ள உசிலங்காட்டு கருப்பர் கோயிலில் 8 ஊர் பொதுமக்கள் சேர்ந்து கொண்டாடும் திருவிழா ஆடிப்படையல் விழா. விழாவையொட்டி உசிலங்காட்டு கருப்பருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகங்களும் செய்யப்பட்டன. தொடர்ந்து பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர். இதில் கஞ்சநாயக்கன்பட்டி, செட்டியபட்டி, ராசிபட்டி, சிங்கிலி...
குளித்தலை ரயில் நிலையம் அருகே ரயிலில் அடிபட்டு திமுக தொண்டர் பலி
குளித்தலை, ஆக. 4: குளித்தலை ரயில் நிலையம் அருகே ரயிலில் அடிபட்டு திமுக தொண்டர் பலியானார். கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியம் வாளாந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (46 ). இவர் கட்டிட கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவர் அப்பகுதி கிளையில் திமுக உறுப்பினராக இருந்து பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஜானகி,...
கரூரில் கண்காட்சி நடத்த இடம் தேர்வு கூட்டுறவு மேலாண்மை இயக்குனர் கள ஆய்வு
கரூர், ஆக. 4: தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய கூடுதல் பதிவாளரும், மேலாண்மை இயக்குநருமான க.சொ.இரவிச்சந்திரன், கரூர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சரின் சட்டமன்றத்தில் அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக கண்காட்சி நடத்துவதற்கு ஏற்ற இடத்தை தேர்வு செய்ய கரூரில் களஆய்வு மேற்கொண்டார். கள ஆய்வின் போது கரூர் சரக கூட்டுறவுச் சங்கங்களின் துணைப்பதிவாளர் கா.சுபாஷினி, கரூர் மாவட்ட...
தளவாபாளையத்தில் சிறப்பு மருத்துவ முகாம்
வேலாயுதம்பாளையம், ஆக. 4: தளவாபாளையத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. கரூர் மாவட்டம் வாங்கல் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் தளவாபாளையம் பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. வாங்கல் வட்டார ஆரம்ப சுகாதாரநிலைய மருத்துவர் டாக்டர் ரூபன்ராஜ் தலைமை வகித்தார். சுகாதாரசெவிலியர்கள், சுகாதார தன்னார்வலர் குழுவினர் பங்கேற்றனர். இதில் முதியவர்கள்,...
துவரங்குறிச்சி பகுதியில் 14 கிலோ குட்கா பறிமுதல்
துவரங்குறிச்சி, ஆக.3: திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி பகுதிகளில் அதிக அளவில் குட்கா விற்பனை செய்யப்படுவதாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் தனிப்படை பிரிவு காவலர்கள் துவரங்குறிச்சி பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி துவரங்குறிச்சி மற்றும் பிடாரப்பட்டி பகுதியில் ஆய்வு செய்தபோது துவரங்குறிச்சியில் முருகேசன் என்பவரது பெட்டிக்கடையில் சுமார்...
திருவெறும்பூரில் மதுபாட்டில் பதுக்கி விற்ற முதியவர் கைது
திருவெறும்பூர், ஆக.3: திருவெறும்பூரில் சட்டவிரோதமாக கள்ளச் சந்தையில் கூடுதல் விலைக்கு அரசு மதுபானங்களை விற்றவரை எஸ்பி தனிப்படை போலீசார் கைது செய்ததோடு, அவரிடமிருந்து 171 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். திருச்சி எஸ் பி செல்வநாகரத்தினம் தனிப்படை எஸ்ஐ வரதராஜன் பெருமாளுக்கு திருவெறும்பூரில் சட்டவிரோதமாக அரசு மதுபானம் கள்ள சந்தையில் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக...
பேக்கரி இயந்திரம் வாங்கி தருவதாக ரூ.70 ஆயிரம் மோசடியில் ஈடுபட்ட வாலிபர் கைது
திருச்சி, ஆக.2: பேக்கரி இயந்திரம் வாங்கி தருவதாக கூறி ரூ.70 ஆயிரம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை கண்ணுடையான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிக்கந்தர் பாஷா (39). இவர் சென்னையிலுள்ள பேக்கரி கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருச்சி கம்பரசம்பேட்டை சேர்ந்த ஒரு நபர் வாட்ஸ்அப் குழு...