துவரங்குறிச்சி அருகே லாரி மோதி டிரைவர் காயம்
துவரங்குறிச்சி, ஜூலை 30: திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த இடையப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட தொப்புலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த பொன்னுச்சாமி மகன் உத்திராபதி (38). லாரி டிரைவர். இவர் நேற்று மாலை வீட்டிலிருந்து அவரது டூவீலரில் மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சேத்துப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது பாப்பாபட்டி பிரிவு சாலை அருகே அடையாளம் தெரியாத டிப்பர் லாரி, நெடுஞ்சாலையில் இருந்து வலது புறம்திரும்பும் போது டூவீலர் மீது மோதியதில் உத்திராபதி தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து துவரங்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.