திருச்சி சரகத்தில் 6 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
திருச்சி, ஜூலை 30: அரியலூர் மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு இன்ஸ்பெக்டர் உதயகுமார், திருச்சி மாவட்டம், வாத்தலை ஸ்டேசனுக்கும், அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ்வரன், அரியலூர் டவுன் ஸ்டேசனுக்கும், அரியலூர் டவுன் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், மீன்சுருட்டிக்கும், ஆண்டிமடம் இன்ஸ்பெக்டர் நடராஜன் அரியலூர் ஸ்டேசனுக்கும், அரியலூர் இன்ஸ்பெக்டர் வேலுசாமி, ஆண்டிமடம் ஸ்டேசனுக்கும், கரூர் மாவட்டம், நங்கவரம் இன்ஸ்பெக்டர் ரூபி, புதுக்கோட்டை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
காத்திருப்புப் பட்டியலில் இருந்த ராஜ்குமார் கரூர் மாவட்டம், நங்கவரம் இன்ஸ்பெக்டராகவும், ராஜேந்திரன் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி இன்ஸ்பெக்டராகவும், இசைவாணி அரியலூர் சைபர் பிரிவு காவல் இன்ஸ்பெக்டராகவும் நியமித்து திருச்சி சரக டிஐஜி வருண்குமார் உத்தரவிட்டுள்ளார்.