மண்ணச்சநல்லூர் புதிய தாசில்தார் பொறுப்பேற்பு
சமயபுரம், ஆக.1: மண்ணச்சநல்லூர் புதிய தாசில்தாராக ராஜேஸ்கண்ணன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
மண்ணச்சநல்லூர் தாசில்தாராக பணியாற்றி வந்த பழனிவேல் துறையூர் பகுதிக்கு சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து திருச்சி மேற்கு பகுதியில் வட்ட வழங்கல் அதிகாரியாக பணியாற்றி வந்த ராஜேஷ்கண்ணன் மண்ணச்சநல்லூர் தாசில்தாராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து நேற்று அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு முன்னாள் தாசில்தார் பழனிவேல் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.