திருச்சி மாவட்ட யோகாசன சாம்பியன்ஷிப் போட்டி
திருச்சி, ஜூலை 28: திருச்சி மாவட்ட யோகாசன சாம்பியன்ஷிப் போட்டி திருச்சி, தில்லைநகரில் நேற்று நடந்தது. இந்த போட்டிகளில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டிகள் 3 வயதுக்கு மேல் 45 வயதுக்கு உள்பட்டவர்களுக்கு நடத்தப்பட்டது. போட்டிகளை யோகாசன சங்க தலைவர் டாக்டர் செந்தில்குமார், தேசிய யோகாசன நடுவர் ராஜசேகர் தொடங்கி வைத்தனர்.
போட்டிகளில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் கேடயம் பரிசாக வழங்கப்பட்டது. இந்த போட்டிகளின் முடிவில் சிறப்பாக செயல்பட்ட 96 வீரர் வீராங்கனைகள் அடுத்த மாதம் ஆகஸ்ட் 30 மற்றும் 31ம் தேதிகளில் கொடைக்கானலில் நடைபெற உள்ள மாநில அளவிலான யோகாசன போட்டிகளில் திருச்சி மாவட்டம் சார்பில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டனர்.