கரூரில் கண்காட்சி நடத்த இடம் தேர்வு கூட்டுறவு மேலாண்மை இயக்குனர் கள ஆய்வு
Advertisement
கரூர், ஆக. 4: தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய கூடுதல் பதிவாளரும், மேலாண்மை இயக்குநருமான க.சொ.இரவிச்சந்திரன், கரூர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சரின் சட்டமன்றத்தில் அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக கண்காட்சி நடத்துவதற்கு ஏற்ற இடத்தை தேர்வு செய்ய கரூரில் களஆய்வு மேற்கொண்டார்.
கள ஆய்வின் போது கரூர் சரக கூட்டுறவுச் சங்கங்களின் துணைப்பதிவாளர் கா.சுபாஷினி, கரூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் மு.அன்பரசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Advertisement