காரில் ரீல்ஸ் மோகம் காய்த்து தொங்கும் பப்பாளிக்காய் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
திருச்சி, ஜூலை 25: அஞ்சல்துறை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அனைத்திந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் தபால்காரர் மற்றும் பல்திறன் ஊழியர்கள் சங்கம் சார்பில் திருச்சி கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கங்களுடன் ஆலோசிக்காமல், தொடங்கியுள்ள ஐடிசி மையங்களை உடனடியாக மூட வேண்டும், திருச்சி கே.கே.நகர் டிசி-யை உடனே மூடி, பழையபடி எஸ்ஓ - விலிருந்து விநியோகம் செய்ய உத்தரவிட வேண்டும்.
புதிய திட்டம் தொடங்கும் முன் ஊழியர்களுடன் கலந்தோலோசிக்க வேண்டும், ஐடிசி/சிடிசி என்ற பெயரில் போஸ்ட்மேன் மற்றும் பல்திறன் ஊழியர்களை அஞ்சல் அலுவலகத்தில் இருந்து வெளியேற்ற கூடாது என்பன உள்ளிட்ட 13 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோட்ட தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். கோட்ட செயலாளர் கோவிந்தராஜன் முன்னிலை வகித்தார். கோட்ட பொருளாளர் சிவலிங்கம் உள்ளிட்ட பல அஞ்சல்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.