துறையூர் அரசு கல்லூரியில் மாணவர்களுக்கு இலவச புத்தகம்
துறையூர், ஜூலை 28: திருச்சி மாவட்டம் துறையூரில் புதிதாக தொடங்கப்பட்ட அரசு கலை அறிவியல் கல்லூரியில் பாடநூல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் துறையூர் எம்எல்ஏ ஸ்டாலின்குமார் கலந்து கொண்டு 74 கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு புத்தகங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
அப்பொழுது துறையூர் மக்களின் 50 ஆண்டுகால கோரிக்கையான இந்த அரசு கலை அறிவியல் கல்லூரியை நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் மற்றும் தமிழக முதல்வர் ஆகியோரிடம் கோரிக்கை வைத்து பெற்றுள்ளேன் எனவும், இந்த கல்லூரியில் துறையூர் மற்றும் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த கிராமப்புற மாணவ மாணவிகள் சேர்ந்து பயன்பெற்று, அவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் அருணாசலம், பேராசிரியர்கள் சுதாகர், டேவிட், சுகிர்தா, ரமேஷ் மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.