வீட்டின் பூட்டை உடைத்து 16.7 பவுன் தங்க நகை கொள்ளை
திருச்சி, ஜூலை 26: திருச்சி புத்துார் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 16.7 பவுன் தங்க நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.திருச்சி புத்தூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் குழுமாயி (60). இவர் தனது வீட்டை பூட்டி விட்டு கும்பகோணத்திற்கு சென்று உள்ளார். பின்னர் திருச்சிக்கு திரும்பியவர் ஜூலை 29ம் தேதி வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, மர்ம நபர்கள் வீட்டின் பீரோவில் இருந்த 16.7 பவுன் தங்க நகைகள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து குழுமாயி திருச்சி அரசு மருத்துவமனை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.