சிலம்ப போட்டியில் வென்றோருக்கு பரிசு
கோவில்பட்டி, ஜூலை 31: கோவில்பட்டியில் மாவட்ட அளவில் நடந்த சிலம்ப போட்டியில் வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ எம்எல்ஏ பரிசுகள் வழங்கினார். கோவில்பட்டியில் தூத்துக்குடி மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி தனியார் கல்லூரியில் நடந்தது. இதில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்ற கோவில்பட்டி டிசிஎஸ்ஜி சிலம்பம் அகாடமி அணிக்கு ஏ.பி.கே. பழனி செல்வம் நினைவு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 2,3,4வது இடங்களை பிடித்த ஏரல் டிஎஸ்டிஏ சிலம்பம் பள்ளி, கோவில்பட்டி பாரதி சிலம்பம் பள்ளி, கோவில்பட்டி ரமணா சிலம்பம் பள்ளி அணிகளுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதில் வெற்றி பெற்ற அணிகள் மாநில போட்டிக்கு தகுதி பெற்றன. தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் தூத்துக்குடி அதிமுக வடக்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ எம்எல்ஏ முதலாம் இடத்தை பிடித்த கோவில்பட்டி டிசிஎஸ்ஜி சிலம்பம் அகாடமி அணி ஓட்டுமொத்தம் சாம்பியன் வென்றது. இந்த அணிக்கு ஏ.பி.கே. பழனி செல்வம் நினைவு கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். நிகழ்வில் கோவில்பட்டி அதிமுக நகரச்செயலாளர் விஜயபாண்டியன், திமுக சிறுபான்மையினர் அணி வடக்கு மாவட்ட துணைத் தலைவர் அமலி பிரகாஷ், திமுக கவுன்சிலர்கள் ஜேஸ்மின் லூர்து மேரி, அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை மாவட்டச் செயலாளர் கவியரசன்,தொழிலதிபர் மகாராஜன், கோவில்பட்டி நாடார் காமராஜர் மெட்ரிக் பள்ளிச் செயலாளர் செல்வம் கலந்துகொண்டனர்.