வணிகர் சங்க உறுப்பினர்கள் கூட்டம்
கயத்தாறு, டிச.8: கயத்தாறில் வணிகர் சங்க உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. வணிக நலவாரியத்தில் பதிவு செய்தல், இனி எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் சங்கத்திற்கான சொந்த கட்டிடம், சங்க வரவு -செலவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் கயத்தாறு ஊருக்குள் அனைத்து பேருந்துகளும் நிரந்தரமாக வந்து செல்வதற்கும், கயத்தாறை சுற்றியுள்ள கிராமங்களுக்கு திருநெல்வேலி மற்றும் கோவில்பட்டி...
மழைநீர் வெளியேற்றும் பணி தீவிரம் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
தூத்துக்குடி,டிச.8: தூத்துக்குடி மாநகராட்சி 15வது வார்டு பகுதியில் மழை நீர் வெளியேற்றும் பணிகளை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்தார். வடகிழக்கு பருவமழை கனமழையால் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அதனை வெளியேற்றும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாநகராட்சி 15வது வார்டுக்குட்பட்ட நியூ சுந்தரம் நகர் குடியிருப்பு பகுதியில்...
விளாத்திகுளம் அருகே வீட்டில் பிரிட்ஜ் வெடித்து ரூ.2 லட்சம் பொருட்கள் சேதம்
விளாத்திகுளம், டிச. 7: விளாத்திகுளம் அருகே தொழிலாளி வீட்டில் பிரிட்ஜ் வெடித்து ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள மீனாட்சிபுரம் நடுத்தெருவை சேர்ந்த தம்பதியினர் சின்னமுனியசாமி- காளியம்மாள். இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். கார்த்திகை தீபத்திருநாளின் 3வது நாளான நேற்று முன்தினம் இரவு, காளியம்மாள் தனது...
திருச்செந்தூரில் முழுமையாக சேதமடைந்த சாலை
திருச்செந்தூர், டிச. 7: திருச்செந்தூர் நகராட்சிக்குட்பட்ட மேலரதவீதி சாலை முழுவதும் சேதமடைந்து போக்குவரத்து லாயக்கற்றதாகி உள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சிரமமடைந்து வருகின்றனர். திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு நகராட்சிக்குட்பட்ட 4 ரதவீதிகள் வழியாக பக்தர்கள் நடந்தும், வாகனங்களிலும் வந்து செல்கின்றனர். மேலும் உள்தெருக்களில் உள்ளவர்கள் ரதவீதிகளை கடந்தே நகருக்கு வெளியே செல்கின்றனர். இதனால்...
கீழவைப்பார், சிப்பிகுளத்தில் மீன்பாடு இன்றி கரை திரும்பிய மீனவர்கள்
குளத்தூர், டிச. 7: குளத்தூர் அருகே உள்ள கீழவைப்பார், சிப்பிகுளம் கடற்கரை பகுதியில் கடந்த வாரம் புயல், மழையால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் படகுகளை கரையோரம் நிறுத்தினர். இதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக பயங்கர காற்று வீசி வருகிறது. இதனால் மீன்பாடுகள் இன்றி வெறும் வலையுடன் மீனவர்கள் கரை திரும்பி வருகின்றனர். ஒருசில மீனவர்கள்...
குரும்பூர் பகுதியில் பூ கட்ட பயன்படும் சம்பு நாரை வெட்டி எடுக்கும் வியாபாரிகள்
உடன்குடி, டிச. 6: திருநெல்வேலி, தூத்துக்குடி நாகர்கோவில், தோவாளை உள்ளிட்ட பகுதிகளில் பெரிய பூ மார்க்கெட்டுகள் உள்ளன. பூ கட்டுவதற்கு பயன்படும் சம்பு என்ற நார், கழிவுநீர்கள் செல்லும் ஓடை, வடிகால் வாய்க்கால்கள் என ஆங்காங்கே ஆள் உயரத்திற்கு அதிகளவில் வளர்ந்துள்ளது. தற்போது பருவமழை பெய்துள்ளதால் சம்பு நார்களின் வளர்ச்சி பெரியளவில் உள்ளது. இதையடுத்து நாகர்கோவில்...
மணப்பாட்டில் பெண்ணை தாக்கி செயின் பறிப்பு
உடன்குடி, டிச. 6: உடன்குடி புதுமனை புது 2ம்தெருவை சேர்ந்தவர் பென்சிகர் மனைவி தமிழரசி(35). இவர், தனது தம்பி மகன் ஜோவன் (2) மற்றும் உறவினர் சகாயசானியா(26) ஆகியோருடன் மணப்பாடு திருச்சிலுவை கோயிலில் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை நடைபெறும் சிறப்பு ஆராதனையில் கலந்து கொண்டுள்ளார். பின்னர் ஆராதனை முடிந்து வீட்டிற்கு புறப்பட்டார். சகாயசானியா மொபட்டை ஓட்ட...
கல் குவாரி லாரிகளால் சாலை சேதம் குளத்தூரில் மக்கள் ஆர்ப்பாட்டம்
குளத்தூர், டிச. 6: குளத்தூரில் இருந்து த.சுப்பையாபுரம், வீரபாண்டியபுரம், முத்துக்குமரபுரம் கிராமங்களை இணைக்கும் கிராமச்சாலை கடந்த சில வருடங்களுக்கு முன்பு பாரத பிரதமர் கிராமச்சாலை திட்டத்தின் கீழ் புதிதாக அமைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொல்லம்பரம்பு பகுதியில் அமைக்கப்பட்ட கல் குவாரியில் இருந்து கனரக வாகனங்களில் 30 முதல் 60 டன் வரையிலான...
சந்தையடியூர் கோயில் வருஷாபிஷேக விழா
உடன்குடி, டிச. 5: சந்தையடியூர் பண்டாரவிளை தெரு கல்யாண விநாயகர் கோயிலில் வருஷாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி காலை 8 மணிக்கு கணபதி ஹோமம், யாகசாலை பூஜை, 10.30 மணிக்கு கும்பாபிஷேகம், மதியம் 12 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் மாவட்ட காங். முன்னாள் பொருளாளர் நடராஜன், சந்தையடியூர் முத்தாரம்மன் கோயில் நிர்வாகி...