பொறியியல் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை
தூத்துக்குடி, ஜூலை 30: தூத்துக்குடி, தெர்மல் நகரை சேர்ந்த அபிச்சந்திரனின் மகள் தர்ஷினி (18). இவரது பெற்றோர் இறந்தபிறகு பாட்டி பராமரிப்பில் இருந்துவந்த இவர் வாகைக்குளம் அருகேயுள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கும், திருச்செந்தூர் ரோட்டில் உள்ள கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வரும் மாணவர் மாரிசெல்வத்திற்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியதாகத் தெரிகிறது. ஆனால், அம்மாணவர் தர்ஷினியிடம் டார்ச்சரில் ஈடுபட்டாராம். இதனால் விரக்தியடைந்த தர்ஷினி, நேற்று முன்தினம் தர்ஷினி வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஆவேசமடைந்த உறவினர்கள், தர்ஷினியை தற்கொலைக்கு தூண்டிய மாணவர் மீது வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி தர்ஷினியின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக மாரி செல்வத்தின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கினர். மேலும் போராட்டக்குழுவினரிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகே தர்ஷினியை உடலை பெற்றுக்கொண்ட உறவினர்கள் அடக்கம் செய்தனர்.