சுடலைமாட சுவாமி கோயிலில் ஆடி கொடை விழா கோலாகலம்
திருச்செந்தூர், ஜூலை 30: திருச்செந்தூரில் மேலத்தெரு யாதவர் சமுதாயத்திற்குப் பாத்தியப்பட்ட சுடலைமாட சுவாமி கோயில் கொடை விழா வெகு விமரிசையாக நடந்தது. இதில் திரளானோர் கலந்துகொண்டு வழிபட்டனர். கொடை விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை சுப்பிரமணிய சுவாமி கோயில் சண்முக விலாசத்தில் இருந்து ரத வீதி வழியாக ஊர்வலமாக எடுத்துவரப்பட்ட தீர்த்தம் கோயிலுக்கு வந்தடைந்ததும் சுவாமிக்கு கும்பம் ஏற்றி குடியழைப்பு தீபாராதனை நடந்தது. கொடை விழாவான நேற்று அதிகாலை 5.30 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை, நண்பகல் 12 மணிக்கு சிறப்பு அலங்காரமாகி மகா தீபாராதனை நடந்தது. இதில் திரளாகப் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு அலங்காரமானதும் மகா தீபாராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து அதிகாலை 4 மணிக்கு நடந்த படப்பு தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் சுவாமிக்கு வாழைத்தார் கட்டி நேர்த்திக்கடன்கள் செலுத்தினர்.
கொடை விழாவில் மேலத்தெரு யாதவ மகாசபை தலைவர் ராமகிருஷ்ணன், செயலாளர் நல்ல சிவம், பொருளாளர் சுடலை, இன்ஜினியர் நாராயணன், திருச்செந்தூர் நகர திமுக செயலாளர் வாள் சுடலை, திமுக மாவட்ட துணை அமைப்பாளர்கள் இசக்கிமுத்து, நம்பிராஜன், நகராட்சி கவுன்சிலர்கள் ஆறுமுகம், முத்துகிருஷ்ணன், அதிமுக ஒன்றிய செயலாளர் பூந்தோட்டம் மனோகரன், பா.ஜ., நகர தலைவர் செல்வகுமரன், திருச்செந்தூர் யாதவ வியாபாரிகள் சங்க தலைவர் பெரியசாமி யாதவ், செயலாளர் முத்துக்குமார் யாதவ், துணை செயலாளர் வன்னியராஜா, பொருளாளர் ராமசுப்பிரமணியன், தொழிலதிபர்கள் வீரபாகு மஹால் வீரபாகு, சுந்தரம் காட்டேஜ் ஆறுமுகம், விவேகா ஆப்செட் வெங்கடேசன், சாந்தி பேக்கரி சதீஷ், ஹோட்டல் அக் ஷய பவன் பெரியசாமி, ஹோட்டல் அர்ச்சனா சக்தி கிட்டப்பா, வக்கீல் பெருமாள், ஆறுமுகம் டெக்ஸ்டைல்ஸ் செந்தில், சுபா கன்ஸ்ட்ரக்சன் செந்தில்ஆறுமுகம், வசந்தம் ஸ்வீட்ஸ் வேலாயுதம் சன்ஸ், அருணா ஸ்டுடியோ செந்தில்ஆறுமுகம், அருண் ஜெராக்ஸ் சிவசுப்பிரமணியன் மற்றும் பக்தர்கள் என திரளானோர் கலந்துகொண்டனர்.
ஏற்பாடுகளை மேலத்தெரு யாதவ மகா சபையினர் மற்றும் கொடை விழா கமிட்டியினர் செய்திருந்தனர். சிவன் கோயில்களில் ஆடித் தபசு திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் சாத்தான்குளம், ஜூலை 30: பேய்குளம் சங்கரலிங்க சுவாமி, சிறுத்தொண்ட நல்லூர் சங்கர ஈஸ்வரர் கோயில்களில் நடந்த ஆடித் தபசு திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சிகளில் திரளானோர் பங்கேற்றனர். சாத்தான்குளம் அருகே பேய்குளம் சங்கரலிங்கபுரம் சங்கரலிங்க சுவாமி சமேத கோமதி அம்பாள் கோயிலில் ஆடித் தபசு திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்தாண்டுக்கான ஆடித் தபசு திருவிழா வழக்கமான உற்சாகத்துடன் கொடியேற்றத்துடன் துவங்கியது. இத்திருவிழா ஆகஸ்ட் 7ம் தேதி வரை நடக்கிறது. முதல் நாளையொட்டி நேற்று முன்தினம் அதிகாலை 5 மணி முதல் 7 மணி வரை கணபதி ஹோமம், அதைத்தொடர்ந்து சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 9 மணிக்கு மேல் கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமாகி கொடியேற்றம் நடந்தது.
இதில் திரளானோர் கலந்துகொண்டனர். திருவிழா நாட்களில் தினமும் பேய்குளம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் சார்பில் சிறப்பு பூஜை, சுவாமி- அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் சப்பரத்தில் எழுந்தருளியதும் வீதியுலா நடக்கிறது. ஆக. 6ம் தேதி மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை, அதைத்தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது. ஆக. 7ம் தேதி அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், 8 மணிக்கு அலங்கார பூஜை, 9 மணிக்கு அம்பாள் தபசுக்கு புறப்பாடு, 9.30 மணிக்கு திருவாசகம் முற்றோதுததல், நண்பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு சுவாமி சீர் வரிசையுடன் அம்பாளை அழைக்க செல்லுதல், இரவு 7 மணிக்கு தபசு காட்சி நடக்கிறது. 8 மணிக்கு அன்னதானம், இரவு 10 மணிக்கு சுவாமி அம்பாள் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. மறுநாள் அதிகாலை 1 மணிக்கு அம்பாள் சுவாமி அலங்கார சப்பரத்தில் எழுந்தருளலைத் தொடர்ந்து வீதியுலா நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் சுந்தர் மற்றும் நிர்வாகிகள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.
ஏரல்: இதேபோல் ஏரல் அருகேயுள்ள பிரசித்திபெற்ற சிறுத்தொண்டநல்லூர் சங்கர ஈஸ்வரர் கோயிலில் ஆடித்தபசு திருவிழா நேற்று (29ம் தேதி) செவ்வாய்க்கிழமை காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியேற்றத்தை தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் திரளாகப் பங்கேற்று தரிசித்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. வரும் ஆக. 7ம் தேதி வியாழக்கிழமையன்று அதிகாலை 4 மணிக்கு மூலஸ்தான சுவாமி அம்பாளுக்கு கும்ப அபிஷேகம், யாக கேள்வி தீபாராதனை, காலை 6 மணிக்கு அம்பாள் தபசுக்கு புறப்படுதல், காலை 8.30 மணிக்கு தாமிரபரணி நதியில் இருந்து பால்குடம் எடுத்து நகர்வலம் வருதல், நண்பகல் 12 மணிக்கு அபிஷேகம்AC, அலங்கார தீபாரதனை, பகல் 1 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு சங்கரஈஸ்வரர் சங்கர நாராயணராக கோமதி அம்பாளுக்கு காட்சி கொடுத்தல், இரவு இரவு 1 மணிக்கு சங்கரநாராயணர் அம்பாளுக்கு சங்கர ஈஸ்வரராக காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து சங்கர ஈஸ்வரர், கோமதி அம்பாள் பொன் சப்பரங்களில் எழுந்தருளி நகர் வலம் வருதல் நடைபெறும்.