கடலோர மக்கள் நல்வாழ்விற்கான சிறப்பு திருப்பலி
தூத்துக்குடி, ஆக. 2:தூத்துக்குடியில் உள்ள உலக புகழ்பெற்ற தூய பனிமயமாதா பேராலயத்தின் 443வது ஆண்டுத் திருவிழா 26ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கி ஆக.5ம்தேதி வரை நடக்கிறது. திருவிழா நாள்களில் உலக நன்மை, சமாதானம், மாணவ-மாணவிகளின் கல்வி மேன்மை, வியாபாரிகள், மீனவர்கள், பனை, உப்பளத் தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்குமான சிறப்பு திருப்பலிகள், நற்கருணை பவனி நடைபெறும். நேற்று 7ம்நாள் திருவிழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு முதல் திருப்பலியும், காலை 5.45 மணிக்கு 2ம் திருப்பலியும் நடந்தது. 6.30 குருஸ்புரம் பங்கு இறைமக்கள் மற்றும் தூத்துக்குடி புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புனித அன்னாள் சபை அருட் சகோதரிகளுக்கான சிறப்பு திருப்பலி நடந்தது. பின்னர் காலை 7.30 மணிக்கு கால்டுவெல் காலனி பங்கு இறைமக்களுக்கான திருப்பலி நடந்தது. தொடர்ந்து காலை 8.30மணிக்கு தாளமுத்துநகர் பங்கு இறைமக்கள், திரு இருதய சபை அருட்சகோதரிகள், கல்வி நிறுவனங்களுக்கான திருப்பலி நடந்தது. காலை 9.30மணிக்கு நகர பொதுநிலையினருக்கான திருப்பலி நடந்தது. இதில் பொதுநிலையினர் பணியகத்தினர் திரளாக கலந்து கொண்டனர். பகல் 11 மணிக்கு சிவகங்கை மறைமாவட்ட கடலோர மக்கள் நல்வாழ்விற்கான சிறப்பு திருப்பலி பங்கு தந்தை ஜாண்பிரிட்ேடா தலைமையில் நடந்தது.
இதில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட கடலோர கிராம மக்கள் பங்கேற்றனர். மாலை 5.30 முத்துநகர் மரியாயின் சேனையினர் பங்கேற்ற திருவிழா திருப்பலி நடந்தது. அனைத்து திருப்பலிகளுக்கும் ஆலய பங்குதந்தை ஸ்டார்வின் முன்னிலை வகித்தார். இரவு 7 மணி இரக்கத்தின் தூதுவர்களாக என்ற தலைப்பில் பொத்தக்காலன்விளை திருக்கல்யாணமாதா ஆலய பங்குந்தை ஜஸ்டின் மறையுரை நிகழ்த்தினார். வரும் 3ம்தேதி நற்கருணை பவனியும் 5ம்தேதி அன்னையின் திருவுருவ பவனியும் நடக்கிறது. இதனை முன்னிட்டு லட்சக்கணக்கான இறைமக்கள் தூத்துக்குடியில் கூடுவர் என்பதால் அன்றையதினம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடிக்கு எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் வைகுண்டத்தில் உற்சாக வரவேற்பு வைகுண்டம், ஆக.2:முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற முழக்கத்தின் அடிப்படையில் இன்று தூத்துக்குடி, திருச்செந்தூர், வைகுண்டம் சட்டமன்ற தொகுதிகளில் மக்களை நேரில் சந்தித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.தூத்துக்குடி, திருச்செந்தூரில் மக்களை சந்தித்து விட்டு அங்கிருந்து வைகுண்டம் வருகை தரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் வைகுண்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் காசிராஜன் முன்னிலையில் மேடைப்பிள்ளையார் கோயில் முன்பு மாலை 5.30மணிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். 25 பெண்கள் பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்கின்றனர். அதனைத்தொடர்ந்து, எடப்பாடிபழனிச்சாமி திறந்த வேனில் நின்றபடி மக்களிடத்தில் சிறப்புரை ஆற்றுகிறார். அதன்பின்பு அவர் நெல்லை மாவட்டம் செல்கிறார்.இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் ஒன்றிய செயலாளர் காசிராஜன், அதிமுகவினர் செய்து வருகின்றனர்.