குலசேகரன்பட்டினத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்
உடன்குடி, ஜூலை 28: குலசேகரன்பட்டினத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடந்தது. குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் கலையரங்கில் நடந்த இம்முகாமிற்கு திருச்செந்தூர் ஆர்டிஓ சுகுமாறன் தலைமை வகித்தார். தாசில்தார் பாலசுந்தரம், உடன்குடி யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுல்தான், அரவிந்தன் மேலாளர் சண்முகவிஜயன் முன்னிலை வைத்தனர்.
இதில் அரசுத்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து 700க்கும் மேற்பட்ட மனுக்கள் பெற்றனர். இதில் உடனடியாகத் தீர்வுகாணப்பட்ட மனுக்களுக்கு சான்றிதழ்கள் முகாமிலேயே வழங்கப்பட்டன. ஊராட்சி செயலர் அப்துல்ரசாக் ரசூல்தீன் நன்றி கூறினார்.