தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நாளை துவக்கம்
தூத்துக்குடி, ஜூலை 14: தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நாளை (15ம் தேதி) துவங்கி ஆக.14ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி வெளியிட்ட அறிக்கை: அரசு துறைகளின் சேவைகள், திட்டங்களை, பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று வழங்கும் வகையில், உங்களுடன் ஸ்டாலின் என்ற புதிய திட்டம், நாளை (15ம் தேதி) துவங்க உள்ளது.
அதன்படி தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் முகாம் நடைபெறும் இடங்கள் விவரம் வருமாறு: தூத்துக்குடி கிழக்கு மண்டலத்தில், வரும் 15ம் தேதி 21,22,23 ஆகிய வார்டுகளுக்கு அழகேசபுரம் ஆனந்தா மஹால். 16ம் தேதி 24,25,26 ஆகிய வார்டுகளுக்கு பீச் ரோடு, செயின்ட் மேரிஸ் மகளிர் கல்லூரி. 17ம் தேதி 27,28,39 ஆகியவார்டுகளுக்கு சத்திரம் தெரு, அறிஞர் அண்ணா மண்டபம். ஜூலை 18ம் தேதி 29,38,41 ஆகிய வார்டுகளுக்கு சிவந்தாகுளம் ரோடு, அபிநயா திருமண மண்டபம். 22ம் தேதி 40,46,47 ஆகிய வார்டுகளுக்கு பாத்திமா நகர், சமுதாய கூடம் ஆகிய இடங்களில் இம்முகாம் நடக்கிறது.