தூத்துக்குடியில் எடப்பாடி பழனிச்சாமி பிரசார இலச்சினை
தூத்துக்குடி, ஜூலை 24: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடி மாவட்டம் வருகை குறித்த பிரசார இலச்சினையை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் வெளியிட்டார். அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற 2026ம் ஆண்டு தேர்தல் பிரசார பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அவர், ஆக.1,2ம் தேதிகளில் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட தூத்துக்குடி, திருச்செந்தூர், வைகுண்டம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்யவுள்ளார்.
அவரை வரவேற்கும் விதமாக மாநில வழக்கறிஞர் அணி துணைச் செயலாளரும், தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் உறுப்பினருமான மைக்கேல் ஸ்டேனிஸ்பிரபு ஏற்பாட்டில், இலச்சினை வெளியிடும் நிகழ்ச்சி தூத்துக்குடியில் நடந்தது. இதில், மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் கலந்து கொண்டு கார், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களில் இலச்சினையை ஒட்டி துவக்கி வைத்தார். அமைப்புச்செயலாளரும், மாவட்ட பொறுப்பாளருமான ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில், அனைத்துலக எம்.ஜி.ஆர்மன்ற இணைச் செயலாளர் ஆறுமுகநயினார், மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் சுதாகர், மாநில அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, பகுதி செயலாளர்கள் சேவியர், முருகன், நட்டார்முத்து, பகுதி ஜெ. பேரவை செயலாளர் சுடலைமணி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் நாசரேத் ஜூலியட், மாவட்ட மாணவர் அணி செயலாளர் விக்னேஷ், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர்தனராஜ், மாவட்ட ஐடி பிரிவு செயலாளர் அருண் ஜெபக்குமார், மாவட்ட அண்ணா ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் நிலா சந்திரன், முன்னாள் மேயர் அந்தோணிகிரேஸி, அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு மண்டல செயலாளர் கல்விக்குமார், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர்கள் சத்யாலட்சுமணன், மிக்கேல், தலைமை பேச்சாளர் முருகானந்தம், முன்னாள் மாவட்ட அரசு வழக்கறிஞர் சுகந்தன் ஆதித்தன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர்கள் முனியசாமி, சரவணபெருமாள், சரவணகுமார், செண்பகராஜ், ஜில்லு ரமேஷ், ராஜா, பிரபாகரன், மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் இந்திரா, மெஜூலா, சாந்தி, ராஜேஸ்வரி, தமிழரசி, ஸ்மைலா, ஷாலினி, அன்னபாக்கியம், முத்துலெட்சுமி, மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் அலெக்ஸ், வட்டசெயலாளர்கள் கொம்பையா, சொக்கலிங்கம், சங்கர், அருண்ஜெயக்குமார், ரெங்கன், ரகுநாதன், மனோகர், மணிகணேஷ், கமலஹசன், பூர்ணசந்திரன், செல்வராஜ் மற்றும் சேவியர்ராஜ், பிராங்கிலின் ஜோஸ், கண்ணன், பாலஜெயம், சாம்ராஜ், சகாயராஜா, யுவன்பாலா உள்பட பலர் பங்கேற்றனர்.