தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஆறுமுகநேரி பெர்ல்ஸ் அகாடமி மாணவர் மாவட்ட அளவில் முதலிடம்

 

ஆறுமுகநேரி, ஜூலை 26: ஆறுமுகநேரி பெர்ல்ஸ் அகாடமி மாணவர் நீட் தேர்வில் தமிழக அரசு 7.5% இடஒதுக்கீட்டில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தும், மாநில அளவில் 60வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். 2025 நீட் தேர்வில் தமிழகத்தில் சுமார் 1,58,429 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் அரசு பள்ளி மாணவ மாணவிகள் 13,727 தேர்வு எழுதினர்.  இதில் தமிழக அரசு 7.5% இடஒதுக்கீட்டில் தேர்ச்சி பெற்று இடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கான பட்டியலை மக்கள் நல வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் வெளியிட்டார்.

இதில் ஆறுமுகநேரி பெர்ல்ஸ் அகாடமியில் பயின்ற மாணவர், திருச்செந்தூர் ராமசாமிபுரத்தைச் சேர்ந்த பனைத்தொழிலாளி பரமசிவன் மகன் செல்வசதீஷ் மாநில அளவில் 60வது இடத்தையும், மாவட்ட அளவில் முதலிடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார். இதே அகாடமியில் பயின்ற மாணவி பிரணவிகா 577 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 227வது இடத்தைப் பெற்றுள்ளார்.

மேலும் இதே அகாடமியில் பயின்ற 14க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தமிழக தரவரிசை பட்டியலில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பெர்ல்ஸ் பப்ளிக் பள்ளி சேர்மன் சுப்பையா, அன்பு அம்மாள் அறக்கட்டளை பொருளாளர் உஷாதேவி, பெர்ல்ஸ் அகாடமி நிறுவன இயக்குனர் மபத்லால், இயக்குனர் ராஜகுமாரி மபத்லால், பள்ளி முதல்வர் கிறிஸ்டினா பிரபாகரன், துணை முதல்வர் முத்துஜா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்