தூத்துக்குடி மாவட்டத்தில் 5 பேர் குண்டாசில் கைது
தூத்துக்குடி, ஜூலை 26: தூத்துக்குடியில் கடந்த 21.06.2025 அன்று தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட சிலுவைப்பட்டி பகுதியைச் சேர்ந்த காளிராஜன் மகன் கார்த்திக்ராஜா (24), நெல்லை அடுத்த தாழையூத்து ராஜவல்லிபுரம் பகுதியை சேர்ந்த மந்திரமூர்த்தி மகன் ஜெபராஜ் (28), தூத்துக்குடி டிஎம்பி காலனி பகுதியைச் சேர்ந்த மாடசாமி மகன் மாரிலிங்கம் (24), பாலா மகன் ராஜ்குமார் (29), தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த வசமுத்து மகன் அருஞ்சுணைமுத்து (எ) அருண் (22) ஆகிய 5 பேரை கடந்த 24.06.2025 அன்று தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கு பிரிவு போலீசார் கஞ்சா விற்ற வழக்கில் கைது செய்தனர்.
இவர்களை 5பேரையும் எஸ்பி ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி கலெக்டர் இளம்பகவத் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி போலீசார் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைப்பதற்கான உத்தரவை பாளை மத்திய சிறையில் வழங்கினர்.