முத்துப்பேட்டையில் அப்துல் கலாம் படத்திற்கு அஞ்சலி
முத்துப்பேட்டை, ஜூலை 28: முத்துப்பேட்டையில் கலாம் கனவு இயக்கம் மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவு தின நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் மூத்த மருத்துவர் டாக்டர் மீரா உசேன் அப்துல் கலாம் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் கலாம் கனவு இயக்க திட்ட இயக்குநர் சாகுல் ஹமீது, ரோட்டரி சங்க தலைவர் பாலசந்திரன், செயலாளர் அந்தோணிராஜா, வர்த்தகக் கழக துணைத்தலைவர் அமிர்தா தியாகராஜன், தமிழ் இலக்கிய மன்ற கௌரவ தலைவர் ராஜ்மோகன், தமுஎச தலைவர் செல்லத்துரை, ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன், கலாம் கனவு இயக்க துணைச்செயலாளர் விவேக் உட்பட பலரும் கலந்துக்கொண்டு அப்துல் கலாம் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.