திருவாரூரில் மின்விநியோகம் நாளை நிறுத்தம்
திருவாரூர்,டிச.5: திருவாரூர் பவித்திரமாணிக்கத்தில் துணை மின்நிலையத்தில் நாளை (6ம்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக அடியக்கமங்கலம் மற்றும் கொரடாச்சேரி ஆகிய துணை மின்நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் திருவாரூர் கடைத்தெரு, தெற்குவீதி, புதுத்தெரு, சேந்தமங்கலம், கொடிக்கால்பாளையம், விஜயபுரம், வாளவாய்க்கால், மேட்டுபாளையம், தஞ்சை சாலை, கே.டி.ஆர்.நகர், மதுராநகர், விளமல், மாங்குடி, கூடூர், முகந்தனூர், அம்மையப்பன், மாவூர், பவித்திரமாணிக்கம்,...
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருவாரூர்,டிச.5: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி திருவாரூரில் நேற்று மறியல் போராட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஈடுபட்டனர். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்திட வேண்டும், சத்துணவு மற்றும் அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலர்கள், ஊர் புற நூலகர்கள், எம்ஆர்பி செவிலியர்கள் மற்றும்...
திருவாரூர், நீடாமங்கலத்தில் கனமழை
திருவாரூர்,டிச.3: திருவாரூர் மற்றும் நீடாமங்கலத்தில் நேற்று மாலை பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் வங்க கடலில் ஏற்பட்ட டிட்வா புயல் சின்னம் காரணமாக திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கனமழை முதல் மிககன மழை வரையில் பெய்தது. அதன்படி,...
திருவாரூர் மாவட்ட அமமுக நிர்வாகிகள் அதிமுகவில் ஐக்கியம்
திருவாரூர்,டிச.3: அமமுகவின் ஆட்சி மன்ற குழு உறுப்பினர் மற்றும் ஒன்றிய செயலாளர் உட்பட திருவாரூர் மாவட்டத்தை 200 குடும்பத்தினர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தனர். திருவாரூரில் அமமுக ஒன்றிய செயலாளராக இருந்து வந்த மணிகண்டன் மற்றும் அமமுக ஆச்சி மன்ற குழு உறுப்பினரும் இளைஞர் இளம் பெண்கள் பாசறை இணை செயலாளருமான செங்கொடி,...
திருவாரூர் மாவட்டத்தில் 3,24,837 ஏக்கர் நெற்பயிருக்கு காப்பீடு
திருவாரூர்,டிச.3: திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 636 விவசாயிகள் தங்களது 3 லட்சத்து 24 ஆயிரத்து 837 ஏக்கர் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்களை காப்பீடு செய்துள்ளதாக கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: திருவாரூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு நெல்பயிருக்கு...
லக்னோவில் பெருந்திரளணி முகாமில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணியில் சாரணியர்கள்
திருத்துறைப்பூண்டி, டிச. 2: பாரத சாரண சாரணியர் இயக்கம் தேசிய தலைமையகத்தின் சார்பில் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்று வரும் 19வது பெருந்திரளணி முகாம் நடைபெற்றுவருகிறது. இதில் எடமேலையூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகாஷ், திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அபினேஷ், எடையூர் அரசு மேல்நிலைப்பள்ளி ரவீராஜ், மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி சரண் ஆகியோர் கண்காணிப்பு...
ஒன்றிய அரசை கண்டித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
திருவாரூர், டிச. 2: ஒன்றிய அரசை கண்டித்து திருவாரூரில் கலெக்டர் அலுவலகம் முன்பாக அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியாவில் பல ஆண்டுகளாக போராடி பெற்ற 44 தொழிலாளர் நல சட்டங்களை 4 தொகுப்பாக சுருக்கி தொழிலாளர்களின் வர்க்கத்திற்கு எதிராக செயல்படும் ஒன்றிய அரசை கண்டித்தும், இந்த 4 சட்டங்களையும் திரும்பப்பெற்று...
திருவாரூரில் மக்கள் குறைதீர் கூட்டம்
திருவாரூர், டிச. 2: திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் 262 கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். திருவாரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டமானது நேற்று கலெக்டர் மோகனசந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பொது மக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல்,...
கால்நடை தீவனப்பயிர்கள் விவசாயிகளே வளர்ப்பதால் கூடுதல் லாபம்பெறலாம்
வலங்கைமான், நவ. 29: நவீன உலக மக்கள் தொகை பெருக்கம் இவை அனைத்தும் வளர்ந்து வரும் காலகட்டத்தில் உணவு உண்ணும் பழக்கத்திலும் இந்த வகையான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அதிலும் கால்நடைகளிலிருந்து கிடைக்கும் பால், முட்டை, இறைச்சி ஆகியவற்றின் தேவை இன்னும் அதிகரித்துள்ளது. ஆனால் கால்நடைகளுக்கு தேவையான தீவனப்பயிர் பெருமளவில் குறைந்துள்ளது.வறட்சியான பருவத்தில் கால்நடைகளுக்கு தீவனப்பயிர் கிடைக்காமல்...