புதிய அங்கன்வாடி மையத்திற்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்
திருத்துறைப்பூண்டி, ஜூலை 31: திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி டெல்டா ரோட்டரி சங்கத்தின் சார்பில் வரம்பியம் புதிய அங்கன்வாடி மையத்திற்கு விளையாட்டு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. இதில் சங்க முன்னாள் தலைவர்கள் காளிதாஸ், மாணிக்கவாசகம், துணைச்செயலாளர்கள் செல்வகணபதி, பிரபாகரன், மணிகண்டன், தலைவர் மதன், செயலர் கார்திக், பொருளாளர் கோகுலவசந்த் ஆகியோர் வரம்பியம் ஊராட்சி புதிய அங்கன்வாடி மையத்திற்கு உபகரணங்களை மைய அமைப்பாளரிடம் வழங்கினார்.